Home>அரசியல்>ஒரே ஆண்டில் கோடீஸ்வர...
அரசியல்

ஒரே ஆண்டில் கோடீஸ்வரர்கள் – நாமல் குற்றச்சாட்டு

byKirthiga|about 2 months ago
ஒரே ஆண்டில் கோடீஸ்வரர்கள் – நாமல் குற்றச்சாட்டு

NPP முக்கியஸ்தர்களின் சொத்து உயர்வு குறித்து நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

அரசின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை; ஆனால் முக்கியஸ்தர்கள் ஒரே ஆண்டில் செல்வந்தர்கள் – நாமல் ராஜபக்ச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று ஓராண்டு கடந்த நிலையில், அதன் முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், “இந்த அரசாங்கம் ஓராண்டாக ஆட்சி செய்தும் எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், ஒருவருட காலத்திற்குள் தேசிய மக்கள் சக்தி அரசின் பல முக்கியஸ்தர்கள் தங்கள் சொத்துக்களை பெரிதும் அதிகரித்து விட்டனர்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “சுருக்கமாகச் சொல்வதானால், சிலர் குறுகிய காலத்திற்குள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். எங்களை விமர்சித்தவர்கள் இப்போது எங்களை விட அதிகமாக செல்வந்தர்களாகிவிட்டார்கள். இந்த செல்வத்தை 76 வருடங்களாக உழைத்துப் பெற்றார்களா? அல்லது மறுமலர்ச்சி அரசாங்கத்தின் ஒரே ஆண்டுக்குள் உழைத்துக் கொண்டார்களா? என்பதனை இவர்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்