தனியார் ஜெட் முதல் பெரிய பங்களா வரை-நயன்தாராவின் சொத்து
நயன்தாரா: பிசினஸ்கள் மற்றும் சொத்து மதிப்பு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிசினஸ்கள் மற்றும் சொத்து விவரம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது பாலிவுட்டிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக விளங்கும் இவர், ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் நயன்தாரா சினிமாவை மட்டும் அல்லாது தொழில்துறையிலும் தன்னுடைய தடத்தை பதித்திருக்கிறார். ஆடம்பரமான சொத்துக்கள் முதல் பல்வேறு பிசினஸ்கள் வரை வைத்திருக்கும் இவரின் வாழ்க்கை முறையும் வியப்புக்குரியது.
சொத்து மதிப்பு
நயன்தாரா தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார். அடிக்கடி கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்னை, ஹைதராபாத், மும்பை, கொச்சி போன்ற நகரங்களுக்கு இந்த ஜெட் மூலம் பயணம் செய்கிறார்.
மேலும் அவர் சென்னை மட்டுமின்றி கேரளா, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும் சொகுசு வீடுகளை வைத்திருக்கிறார். குடும்பத்துடன் நேரம் செலவிடும் போது இந்த வீடுகளிலேயே அதிகம் தங்குவதாக கூறப்படுகிறது.
கார் சேகரிப்பில் கூட நயன்தாரா பின் படாமல் இருக்கிறார். BMW 5 Series, BMW 7 Series, Mercedes GLS 350 D, Ford Endeavour, Innova Crysta போன்ற பல கார்கள் அவரிடம் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் எனப்படுகிறது. அதற்கு மேலாக சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாளில் விக்னேஷ் சிவன், 2.69 கோடி மதிப்புள்ள Mercedes Maybach காரை பரிசளித்தார்.
வணிகத் துறையிலும் நயன்தாரா தன் பங்களிப்பை நிரூபித்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு தனது நண்பருடன் இணைந்து லிப் பாம் தயாரிக்கும் Skin Care நிறுவனத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 9Skin என்ற பியூட்டி புராடக்ட்ஸ் பிராண்ட் மற்றும் Femi9 என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இதைத் தவிர தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டிலிருந்து வெற்றிகரமான படங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.
சினிமாவிலும் தொழில்துறையிலும் முன்னணி இடத்தை பிடித்துள்ள நயன்தாரா, உண்மையிலேயே "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்திற்குத் தகுதியானவர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|