Home>உலகம்>நேபாள மலையில் பனிச்ச...
உலகம்

நேபாள மலையில் பனிச்சரிவு : 3 பேர் பலி

byKirthiga|4 days ago
நேபாள மலையில் பனிச்சரிவு : 3 பேர் பலி

நேபாள பனிச்சரிவில் 3 பேர் பலி - 4 மலையேற்ற வீரர்களை காணவில்லை

கிழக்கு நேபாளத்தில் உள்ள ஒரு மலை அடிவார முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது மூவர் உயிரிழந்ததுடன், நான்கு வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நவம்பர் 3, திங்கள்கிழமை காலை 5,630 மீட்டர் உயரமுள்ள யாலுங் ரி சிகரத்தில் நிகழ்ந்தது. அப்போது 12 பேர் கொண்ட குழுவை பனிச்சரிவு தாக்கியது என்று டோலாகா மாவட்டத்தின் மூத்த காவல் அதிகாரி ஜியான் குமார் மஹாதோ தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இருவர் நேபாளர்களும் ஒருவர் வெளிநாட்டவருமாவார் என அவர் கூறினார். எனினும், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் தேசியத்துவம் குறித்து அவர் தெளிவாக கூறவில்லை.

சில ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஏழு பேர் வரை பனிச்சரிவில் உயிரிழந்திருக்கலாம் என்றும், அதில் அமெரிக்கர்கள், ஒரு இத்தாலியர் மற்றும் ஒரு கனேடியர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மழை மற்றும் பனி காரணமாக அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் தாமதமானதாக இருந்தது. எனினும் தற்போது மீட்பு ஹெலிகாப்டர் அந்தப் பகுதியில் தரையிறங்கியுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

உலகின் உயர்ந்த 10 சிகரங்களில் 8 நேபாளத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எவரெஸ்ட் மலையும் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்களும் சுற்றுலா பயணிகளும் நேபாளத்தை நாடுகின்றனர்.

ஆனால், குளிர்காலத்தை ஒட்டி வரும் இளவேனில் கால மலையேற்றங்கள் பெரும்பாலும் குறைந்த அளவில் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் குறுகிய நாட்கள், கடும் பனி, கடினமான பாதைகள் மற்றும் மலை உச்சியை அடையக்கூடிய குறுகிய நேரம் என்பவையாகும்.

சமீபத்தில், "மொன்தா" எனப்படும் புயல் நேபாளம் முழுவதும் கடும் மழையும் பனிப்பொழிவையும் ஏற்படுத்தியது. இதனால் பல பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் இமயமலைப் பாதைகளில் சிக்கியிருந்தனர்.

மேலும், நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள தொலைதூர மலை ஒன்றை ஏறிக் கொண்டிருந்த இரண்டு இத்தாலிய மலையேற்ற வீரர்களும் காணாமல் போயுள்ளதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்