Home>உலகம்>வங்கக்கடலில் புதிய த...
உலகம்

வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு

byKirthiga|16 days ago
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு

24 மணி நேரத்தில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகி வலுப்பெறும் என எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை துறை கணிப்பு

வங்கக்கடலில் நாளை (23) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளது. இதேவேளை, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு கர்நாடக மாநிலங்களின் உள்நாட்டு பகுதிகளில் தற்போது ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலம் நிலவி வருவதாகவும் வானிலை துறை தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணிநேரங்களில் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மெதுவாக வலுவிழக்கக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சுழற்சியின் விளைவாக நாளை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது உருவான பின், அடுத்த 24 மணிநேரங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென்கிழக்கு அரபிக்கடலில் கடந்த சில மணிநேரங்களாக நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு சுமார் 5 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், அடுத்த ஒரு நாளுக்குள் மேலும் அதே திசையில் நகரும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்