Home>வேலைவாய்ப்பு>ஆண்டு ரூ.1.6 கோடி சம...
வேலைவாய்ப்பு

ஆண்டு ரூ.1.6 கோடி சம்பளம் - நார்வே அரசின் வேலைவாய்ப்பு

byKirthiga|19 days ago
ஆண்டு ரூ.1.6 கோடி சம்பளம் - நார்வே அரசின் வேலைவாய்ப்பு

இயற்கையின் மத்தியில் வேலை செய்வோருக்கு வாய்ப்பு – நார்வே அரசின் திட்டம்

வாரத்தில் 42 மணி நேரம் வேலை செய்தால் போதும் – இலவச வீடு, உணவும் சேர்த்து நார்வேவில் வேலை!

உலகம் முழுவதும் வேலை அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சில நாடுகள் வேலை மற்றும் தனி வாழ்க்கை சமநிலையை பேணும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது அதில் மிகப்பெரிய செய்தியாக மாறியுள்ளது. ஒரு அழகிய ஐரோப்பிய நாடு தனது புதிய வேலை வாய்ப்புகளுக்காக வழங்கும் அதிசய நிபந்தனைகள்.

அந்த நாட்டின் அரசாங்கம் தற்போது வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் புதிய ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இதன் படி, அங்கு பணிபுரிய வருவோருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.6 கோடி வரையிலான சம்பளம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி வீடு, உணவு, போக்குவரத்து, மருத்துவ காப்பீடு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பு நார்வே நாட்டில் உள்ள லோஃபோடன் தீவுகள் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக அழகான இயற்கை தீவுகளில் ஒன்றாகும். பனிச்சரிவுகள், கடற்கரை கிராமங்கள், மற்றும் மாயமான வட ஒளிகள் (Northern Lights) காரணமாக இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது.

அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் தற்போது சுற்றுலா சீசனுக்காக மருத்துவர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், ஹோட்டல் மேலாளர்கள், மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது.

அந்த வேலைகளின் முக்கிய நிபந்தனைகள்:

  • வாரத்திற்கு மட்டும் 4 நாள் (42 மணி நேரம்) வேலை.

  • பணியிடங்கள் அனைத்தும் கடற்கரை மற்றும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.

  • ஆங்கிலம் அல்லது நோர்வே மொழியில் பேசும் திறன் அவசியம்.

  • குறைந்தது 2 வருட தொழில் அனுபவம் அவசியம்.

அங்குச் சென்று பணிபுரிபவர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம், பயணச் செலவு, உணவு மற்றும் குடிநீர் வசதிகளை முழுமையாக வழங்குகிறது. குடும்பத்துடன் குடிபெயர்வோர் தங்கள் குழந்தைகளுக்கு இலவச கல்வி வசதியும் பெறலாம்.

இந்த வேலைகள் தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பல நாடுகளில் இருந்து இதற்காக விண்ணப்பங்கள் பெருமளவில் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது வேலை மட்டுமல்ல. இயற்கையின் மத்தியில் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவோருக்கான ஒரு அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்