Home>இலங்கை>பேலியகொட NPP உறுப்பி...
இலங்கை

பேலியகொட NPP உறுப்பினரின் கணவர் ஹெராயினுடன் கைது!

byKirthiga|1 day ago
பேலியகொட NPP உறுப்பினரின் கணவர் ஹெராயினுடன் கைது!

ஹெராயினுடன் கைது – NPP உறுப்பினரின் கணவர் 7 நாள் தடுப்பில்

அனுராதபுரத்தில் ஹெராயினுடன் பிடிபட்ட NPP உறுப்பினரின் கணவரை மேலும் 7 நாள் விசாரிக்க நீதிமன்ற அனுமதி

தம்புத்தேகம நீதிமன்றம், எப்பவள பகுதியில் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) பெலியகொடா நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலாவின் கணவரை மேலும் விசாரிக்க, ஏழு நாள் தடுப்புத் தண்டனை உத்தரவை இன்று (6) பிறப்பித்துள்ளது.

நேற்று (5) அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட பெலியகொடா நகர சபை உறுப்பினரின் கணவரை விசாரிக்க அனுமதி கோரிய அனுராதபுர பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவின் கோரிக்கையை தம்புத்தேகம நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதன்படி, குறித்த நபரை நவம்பர் 12ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுர போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் இன்று (6) தம்புத்தேகம நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்