Home>வணிகம்>ஆன்லைன் கடன்கள் – மற...
வணிகம்

ஆன்லைன் கடன்கள் – மறைமுக மோசடி?

bySite Admin|3 months ago
ஆன்லைன் கடன்கள் – மறைமுக மோசடி?

ஆன்லைன் கடனால் நெருக்கடியில் சிக்கும் இலங்கை வாழ் மக்கள்.

இலங்கையில் கடன் மோசடி: பெண்கள் மற்றும் குடும்பங்கள் சிக்கும் வெற்றிட அச்சுறுத்தல்

இணையத்தின் வளர்ச்சி மக்களுக்கு பல வசதிகளை வழங்கி வந்தாலும், அதன் இருண்ட பக்கங்களில் பல மோசடிகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்று தான் — ஆன்லைன் கடன் மோசடி.

இலங்கையில் இன்றியமையாத செலவுகள், பணவீக்கத்தின் காரணமாக மக்கள் நெருக்கடியில் வாழ்கின்றனர்.

இந்த சூழ்நிலையைச் சுட்டிக்காட்டி, இணையத்தின் மூலம் பல தனியார் கடன் செயலிகள் குறுகிய காலத்திற்கான கடன்களை வழங்குவதாக கூறி ஏமாற்றி வருகின்றன. இதில் அதிகளவில் பாதிக்கப்படும் மக்களாக பெண்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சந்திக்க முடிகிறது.


ஆன்லைன் கடன்கள்



இந்த செயலிகள் பெரும்பாலும் Google Play Store மற்றும் Third-party websites வழியாக கிடைக்கின்றன. முதலில் குறைந்த தொகையை (ரூ. 5,000 – ரூ. 30,000) விரைவாக கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றன. கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் உங்கள் மொபைல் கமெரா, கோல் லாக், கான்டாக்ட் லிஸ்ட், கல்லரி போன்றவற்றுக்கு அனுமதி கோருகிறார்கள். இவற்றை அனுமதிக்காமல் நீங்கள் கடனைப் பெற முடியாது.


பணத்தை பெற்ற பிறகு தான் பிரச்சனை தொடங்குகிறது. அதிக வட்டி, குறுகிய கட்டண காலம், மறைமுக கட்டணங்கள் உள்ளிட்ட பல மோசடிகள் இதில் அடங்கும். சில சமயங்களில், நீங்கள் வாங்கிய தொகை 5,000 என்றால், 7 நாட்களில் திருப்பி செலுத்த வேண்டிய தொகை 9,000 – 10,000 ரூபாயாக கூட இருக்கும்.

இந்த திருப்பிச் செலுத்த முடியாத நிலை வந்தவுடன், மிரட்டல், காட்சிப் பேச்சு, புகைப்படங்களைத் திருத்தி ஷேர் செய்வது, குடும்பத்தினரிடம் அழைத்து பழிப்பது போன்ற கொடூர செயல்கள் தொடங்குகின்றன. பல பெண்கள், சிறிய தொழில்களைக் கொண்ட வீட்டுப்பண்புடையவர்கள், வேலைக்கு செல்லாதவையர் – இவர்கள் குடும்ப செலவுக்காகவே இந்த கடனை விரைவாக வாங்குகிறார்கள்.

ஆனால் அதற்குப் பின் அவர்கள் எதிர்நோக்கும் அதிக மன அழுத்தம், சமூக அவமானம், தகாத சிந்தனை போன்றவை ஆழமாக பாய்கின்றன. இலங்கையில் இதேபோன்ற கடன்களால் பாதிக்கப்பட்டு தகாத முடிவு எடுத்துக்கொண்ட பெண்கள் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வருகிறது.



மோசடியில் சிக்கும் அப்பாவி பெண்கள்...


பொதுவாக இக்கட்டான சூழ்நிலையை தப்பிக்க, பாதிக்கப்பட்டவர்கள் இதை பொது முறைப்பாடாக எடுக்க தைரியப்படுவதில்லை. காரணம்: “நான் ஏன் அவ்வளவு கடன் வாங்கினேன்?” என்ற தவறான வருந்தும் எண்ணம் மற்றும் “மக்கள் என்ன நினைப்பார்கள்?” என்ற அவமானக் கோணம்.


இந்த மோசடிகளை உருவாக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றன. அவர்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களை மீறி செயல்படுகிறார்கள். மத்திய வங்கியின் அனுமதியில்லாமல் கடன்கள் வழங்குவது சட்டவிரோதம். ஆனால் மக்களுக்கு இந்த தகவல்கள் தெரியாததால், அவர்கள் விழிக்காமல் சிக்கிக்கொள்கிறார்கள்.

இலங்கையில் ஆன்லைன் கடன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு உரிய நிதி அறிவு இல்லாமை, உடனடி பணத் தேவை, மற்றும் சமூக பாசாங்குகள் ஆகியவை இவற்றுக்குக் காரணமாகின்றன. பெண்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனை.

அதனால், இப்படி ஏமாற்றப்படும் முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் – எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம், official financial institutions-ஐ மட்டும் நம்புங்கள், Google Reviews, Play Store Ratings, அனுமதிகள் ஆகியவற்றைப் பார்த்த பிறகே கடனுக்குப் போங்கள்.

முதன்மையாக – அவசியமின்றி கடன் எடுக்காதீர்கள். உங்கள் தகவல்களைப் பாதுகாத்து, உங்கள் தைரியத்தையும், அமைதியையும் காக்குங்கள். நம்பிக்கைக்குரிய நிதி நிறுவனங்கள் மூலம் மட்டும் பண உதவியை நாடுங்கள்.