Home>உலகம்>6 பேரைக் கொன்ற இலங்க...
உலகம் (கனடா)குற்றம்

6 பேரைக் கொன்ற இலங்கை மாணவருக்கு கனடாவில் ஆயுள் தண்டனை!

byKirthiga|1 day ago
6 பேரைக் கொன்ற இலங்கை மாணவருக்கு கனடாவில் ஆயுள் தண்டனை!

ஒட்டாவா குடும்பக் கொலை வழக்கு - 25 ஆண்டுகள் வரை பரோல் இன்றி ஆயுள் சிறை

தாய், நான்கு குழந்தைகள், குடும்ப நண்பர் கொல்லப்பட்ட ஒட்டாவா கொலை வழக்கு – நீதிபதி: “நகரின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான குற்றம்”

கனடாவின் ஒட்டாவா நகர புறநகர் பகுதியில் 2024 ஆம் ஆண்டில் நடந்த கொடூரமான குழுக் கொலை வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்ட Febrio De-Zoysa என்ற இலங்கை மாணவருக்கு, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் ஆறு பேரைக் கொன்றதாகவும், ஒருவரை கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

2024 மார்ச் மாதத்தில் Barrhaven என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவம், கனடா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 35 வயதான தாய் தர்ஷனி ஏகநாயக்கே, அவரது நான்கு குழந்தைகள் – 7 வயது இனுகா, 4 வயது அஷ்வினி, 3 வயது ரணயா மற்றும் 2 மாத குழந்தை கேல்லி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அதே சமயம், குடும்ப நண்பரும் வாடகையாளருமான 40 வயது காமினி அமரகூனும் கொல்லப்பட்டார். தந்தை தனுஷ்க விக்ரமசிங்க தாக்குதலில் கடுமையாக காயமடைந்தார்.

நீதிபதி கேவின் பிலிப்ஸ், இது ஒட்டாவா நகரத்தின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டு, “இரண்டு அழகான குடும்பங்களை அழித்துவிட்டாய், இந்த நகரை அதன் மையம் வரை அதிரவைத்தாய்,” எனக் கூறினார். மேலும், குற்றவாளியை நோக்கி “நீ கனவுகளுக்கே பயத்தை ஏற்படுத்தும் நபர். நீ செய்தது மனிதாபிமானமற்றது, பேய்க்குணம் கொண்டது,” என கடுமையாக கண்டித்தார்.

De-Zoysa, 19 வயதில் கனடாவுக்கு சர்வதேச மாணவராக வந்து Algonquin கல்லூரியில் படித்து வந்தார். அந்தக் குடும்பத்தின் வீட்டில் அடித்தளத்தில் வாடகைக்கு தங்கி இருந்தார். ஆனால் பின்னர் மன அழுத்தம் மற்றும் கல்வியில் தோல்வி அடைவதற்கான பயம் காரணமாக தன்னை தானே கொலை செய்யும் எண்ணத்தில் மூழ்கி, அதை கொடூரமான வன்முறையாக மாற்றியதாக போலீஸ் விசாரணையில் கூறினார்.

Selected image


அவர் கொலையிற்காக ஜனவரி மாதமே 38 செ.மீ. நீளமான வேட்டைக்கத்தியை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் அடித்தளத்தில் இருந்த காமினி அமரகூனை கொன்று, பிறகு குடும்பத்தினரிடம் “டிவியில் ஹாரர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று பொய்யாக கூறி மேல்மாடிக்குச் சென்று தாய் மற்றும் நான்கு குழந்தைகளையும் படுகொலை செய்தார்.

இரவில் வீடு திரும்பிய தனுஷ்க விக்ரமசிங்கவையும் தாக்கி முகம், மார்பு போன்ற இடங்களில் குத்தினார். ஆனால் தனுஷ்க போராடி தப்பி, இரத்தத்தில் மூழ்கியபடி வெளியே ஓடி போலீசை அழைத்தார்.

தனுஷ்க ஆறு குத்துக் காயங்களால் நரம்பு சேதம் மற்றும் விரல்கள் இழப்பு போன்ற துயரங்களை சந்தித்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் “என் வாழ்க்கையின் இருண்ட நாள் அது. நான் தினமும் என் குடும்பத்தின் முகங்களை நினைத்தே விழிக்கிறேன்,” எனக் கண்கலங்க கூறினார்.

காமினி அமரகூனின் மனைவி மற்றும் 12 வயது மகளும் தங்கள் துயரத்தை நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டனர். “என் உலகமே உடைந்துவிட்டது,” என மனைவி கூறினார். சிறுமி “என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. நண்பர்களை காணவில்லை, பயம், தனிமை மட்டும் உள்ளது,” என தெரிவித்தாள்.

De-Zoysa தனது அறிக்கையில் “அப்போது நான் மனநிலையில்லாமல் இருந்தேன், என்னை நானை கொலை செய்யும் எண்ணத்துடன் போராடிக் கொண்டிருந்தேன்,” என கூறினாலும், நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். “நீ செய்த ஒவ்வொரு செயலும் திட்டமிட்டதாக இருந்தது,” எனக் கூறி கடுமையான தண்டனையை விதித்தார்.

நீதிமன்றம், De-Zoysa-வுக்கு பரோல் இல்லாத ஆயுள் சிறைத் தண்டனையை 25 ஆண்டுகளுக்கு அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு கனடாவிலுள்ள இலங்கை சமூகத்தையும் ஆழமாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்