Home>உலகம்>பிக்காசோவின் அரிய ஓவ...
உலகம்

பிக்காசோவின் அரிய ஓவியம் 27 மில்லியன் யூரோக்கு விற்பனை

byKirthiga|14 days ago
பிக்காசோவின் அரிய ஓவியம் 27 மில்லியன் யூரோக்கு விற்பனை

பாப்லோ பிக்காசோவின் "டோரா மாருடன் மலர் தொப்பியுடனான பெண் உருவம்" -

டோரா மாரை வரையப்பட்ட பிக்காசோவின் ஓவியம் பாரிசில் நடைபெற்ற ஏலத்தில் சாதனை விலை பெற்றது

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ வரைந்த “Bust of a Woman with a Flowered Hat (Dora Maar) 1943” என்ற தலைப்புடைய ஓவியம், பாரிசில் நடைபெற்ற ஏலத்தில் 27 மில்லியன் யூரோ (அமெரிக்க டாலர் 31.49 மில்லியன்) என்ற அபாரமான விலையில் விற்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் 1944 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு குடும்பத்தால் வாங்கப்பட்டு, பல தசாப்தங்களாக அவர்களின் தனிப்பட்ட சேமிப்பில் இருந்தது. சமீபத்தில் அந்த குடும்பத்தின் வாரிசுகள் இதனை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

ஏலக் கட்டணங்கள் உட்பட மொத்த விலை 32 மில்லியன் யூரோவாக இருந்ததாக Drouot ஏல மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். வாங்கியவர் ஏல அறையில் இருந்தாலும், அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த ஓவியம் இதுவரை பொதுமக்கள் முன் ஒருபோதும் காண்பிக்கப்படவில்லை. இதன் இருப்பை உறுதிப்படுத்தும் ஒரே ஆதாரம் 1944ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படமே என கலை நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஏல நிபுணர் கிறிஸ்டோஃப் லூசியன் கூறுகையில், “இது பிக்காசோவின் மிக உணர்ச்சி மிகுந்த ஓவியங்களில் ஒன்று. ஏனெனில் அவர் இந்த ஓவியத்தை வரைந்த காலத்தில், தனது காதலி டோரா மாரை விட்டு பிரெஞ்சு ஓவியர் பிரான்சுவாஸ் ஜிலோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இந்த ஓவியத்தின் வழியாக நாம் ஒரு பெண் தனது கண்ணீரை அடக்கிக்கொள்வதை காண்கிறோம்,” என்றார்.

கலை நிபுணர் ஆக்னஸ் செவேஸ்த்ரே-பார்பே கூறுகையில், வாரிசுகள் இதனை விற்பனை செய்ய தீர்மானித்ததற்குக் காரணம், அந்த ஓவியத்தை உடனடியாகப் பங்கிட்டு வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுதான் என தெரிவித்தார்.

பிக்காசோவின் டோரா மாரை மையமாகக் கொண்ட இந்த அரிய ஓவியம், உலகக் கலை வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றதாக நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்