Home>பொழுதுபோக்கு>மாதம் ரூ.6.50 லட்சம்...
பொழுதுபோக்கு

மாதம் ரூ.6.50 லட்சம் தர ஜாய்கிரிசில்டா மனு தாக்கல்!

byKirthiga|9 days ago
மாதம் ரூ.6.50 லட்சம் தர ஜாய்கிரிசில்டா மனு தாக்கல்!

மாதம் ரூ.6.50 லட்சம் தர மனு தாக்கல்!

கர்ப்பிணி ஜாய்கிரிசில்டா மனு – பராமரிப்பு தொகை கேட்டு ரங்கராஜுக்கு உத்தரவு கோரிக்கை

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய்கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தன்னுடைய மருத்துவம், வீட்டு வாடகை மற்றும் அன்றாட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

முன்னதாக ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், 2023ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய்கிரிசில்டாவை கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.

தற்போது ஜாய்கிரிசில்டா கருவுற்ற நிலையில் ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், பலமுறை கருவுற்ற பின்னர் ரங்கராஜின் வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்ய நேர்ந்ததாகவும் ஜாய்கிரிசில்டா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலையில் தன் மருத்துவ மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.6,50,000 வழங்க ரங்கராஜ் மீது உத்தரவிட வேண்டும் என ஜாய்கிரிசில்டா தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்