Home>இலங்கை>முன்னாள் அதிபர் ரணில...
இலங்கைஅரசியல்

முன்னாள் அதிபர் ரணிலுக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

bySuper Admin|3 months ago
முன்னாள் அதிபர் ரணிலுக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அரச நிதி முறைகேடு வழக்கு – ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமறியல்

கொழும்பு கோட்டை நீதிமன்றம் – ரணில் விக்கிரமசிங்கை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு சிஐடி அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

TamilMedia INLINE (45)



அரச நிதி முறைகேடு தொடர்பான விசாரணை, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவி மைத்திரீ விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்ற பயணத்துடன் தொடர்புடையதாகும். இதற்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றப்புலனாய்வு துறை, இதற்கான ஆதாரங்களை முன்பே நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், இன்று வாக்குமூலம் பெற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilMedia INLINE (46)


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

Tamilmedia.lk