Home>இலங்கை>மோடிக்கு 75வது பிறந்...
இலங்கைஇந்தியா

மோடிக்கு 75வது பிறந்தநாள் வாழ்த்து – ரணிலும் இணைந்தார்

byKirthiga|about 2 months ago
மோடிக்கு 75வது பிறந்தநாள் வாழ்த்து – ரணிலும் இணைந்தார்

டிரம்ப், ஜோர்ஜியா மெலோனி, ரிஷி சுனக் உடன் ரணில் – மோடிக்கு வாழ்த்து

உலகத் தலைவர்கள் வாழ்த்தும் பட்டியலில் ரணில் – மோடிக்கு 75வது பிறந்தநாள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி, வடகுஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள வட்நகர் எனும் சிறிய நகரத்தில் பிறந்த மோடி, இன்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக திகழ்கிறார்.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில், இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் தனது உத்தியோகபூர்வ X (முன்னாள் ட்விட்டர்) கணக்கின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

Warmest birthday wishes to my good friend, Prime Minister @narendramodi.

May you be blessed with good health, strength, and continued wisdom. pic.twitter.com/D3y5wf05Rw

— Ranil Wickremesinghe (@RW_SRILANKA) September 17, 2025



அதே நேரத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப், மோடிக்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், பின்னர் X-ல் (ட்விட்டர்) பதிவிட்டுள்ளார். அதில், மோடி “அற்புதமான பணியை செய்து வருகிறார்” என்றும், ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு செல்வதில் அவரின் ஆதரவுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Selected image


சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்த வர்த்தக வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பிறகு, இருநாடுகளுக்கிடையேயான உறவு மீண்டும் மேம்பட்டிருப்பதாக இந்த தொலைபேசி உரையாடல் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மோடியும் அதற்கு பதிலளித்து, டிரம்ப் உடனான நட்புறவு வலுவாக உள்ளது என்றும், “இரு நாடுகளும் இயல்பான கூட்டாளிகள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், உலகத் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். உலக அரங்கில் வலுவாக நிற்கும் இந்தியாவின் பிரதமரான மோடியின் பிறந்தநாள், சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்