ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த மோதிரம் வைரல்!
நிச்சயதார்த்த மோதிரத்துடன் ராஷ்மிகா – வைரலாகும் புதிய புகைப்படம்!
ராஷ்மிகா மந்தனாவின் மோதிரம் வைரல்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை முதன்முறையாக பொதுவில் காண்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
‘கீர்த்தி சுரேஷ்’, ‘சமந்தா’ போன்ற பிரபலங்களைப் போலவே, ராஷ்மிகாவும் இன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணியில் உள்ளார்.
பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ள ராஷ்மிகா, கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இருவரும் இதுகுறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், சமீபத்தில் நடந்ததாக கூறப்படும் அவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வு மீண்டும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் தீவிரம் பெற்றது, ராஷ்மிகா அணிந்திருந்த அழகிய வைர மோதிரத்தின் காரணமாகும். நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ராஷ்மிகாவிடம், கையில் அணிந்திருந்த மோதிரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, “இரண்டு மோதிரங்களுமே எனக்கு மிகவும் முக்கியமானவை” என சிரிப்புடன் பதிலளித்தார் ராஷ்மிகா. இதற்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்ப, அவர் காட்டிய அந்த மோதிரமே நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டுள்ளனர்.
இப்போது அந்த புகைப்படம் இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக மாறியுள்ளது. “இது விஜய் தேவரகொண்டா கொடுத்த மோதிரமா?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுவரை ராஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா யாரும் இதுகுறித்து விளக்கம் அளிக்காதபோதிலும், ரசிகர்கள் இதை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.
தற்போது இந்த மோதிர புகைப்படம் ராஷ்மிகாவின் புதிய காதல் அடையாளமாக இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|