பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளை அதிர்ச்சி
காயமோ உயிரிழப்போ இல்லை – விசாரணை தீவிரம்
உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகம் கொள்ளை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது
பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்த அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை உடனடியாக மூடப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர் ரஷீதா தாத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், “இச்சம்பவத்தில் எந்தக் காயமோ உயிரிழப்போ இல்லை. நான் தற்போது அருங்காட்சியக அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து சம்பவ இடத்தில் உள்ளேன். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.
கொள்ளை தொடர்பான விவரங்கள், குறிப்பாக எது திருடப்பட்டிருக்கலாம் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
மோனாலிசா மற்றும் வீனஸ் டி மிலோ போன்ற உலகப் புகழ்பெற்ற கலைப்பணிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் லூவர் அருங்காட்சியகம், உலகில் அதிகம் பார்வையிடப்படும் கலாச்சார மையங்களில் ஒன்றாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|