புற்றுநோய்க்கு தடுப்பூசி - ரஷ்யாவின் கண்டுபிடிப்பு!
ஆரம்ப பரிசோதனையில் அசத்தல் முடிவு: ரஷ்யாவின் புதிய தடுப்பூசி
mRNA தொழில்நுட்பத்தில் உருவான புற்றுநோய் தடுப்பூசி – புற்றுநோய் சிகிச்சையில் புதிய யுகம் தொடங்குமா?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையின் விளக்காகத் தோன்றும் செய்தியை ரஷ்யா அறிவித்துள்ளது.
என்டெரோமிக்ஸ் (Enteromix) எனும் புதிய புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களின் ஆரம்ப கட்ட பரிசோதனையில் 100% வெற்றி மற்றும் பாதுகாப்பு பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியைப் பெற்ற நோயாளிகளில் கட்டிகள் சுருங்கியுள்ளன மேலும் பெரிய அளவிலான பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை என்பது சிறப்பு.
mRNA அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்பு
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்பட்ட mRNA தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக, நோய் எதிர்ப்பு அமைப்பை நேரடியாக புற்றுநோய் செல்ல்களை அடையாளம் கண்டு அழிக்கும் வகையில் பயிற்சியளிக்கும் புத்திசாலித்தனமான மற்றும் பாதுகாப்பான முறை இது.
என்டெரோமிக்ஸ் தனிப்பட்ட நோயாளியின் கட்டி அமைப்புக்கு ஏற்ப பெர்சனலைஸ்டு இம்யூனோத்தெரபி ஆக உருவாக்கப்படுகிறது.
ஆரம்ப பரிசோதனையில் 48 பேர் பங்கேற்றனர். இதை ரஷ்யாவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி ரேடியாலஜி மையம் மற்றும் என்ஜெல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனம் இணைந்து மேற்கொண்டன.
இந்த அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இன்டர்நேஷனல் எகனாமிக் ஃபோரத்தில் வெளியிடப்பட்டது.
ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தால், இது புற்றுநோய் மருத்துவத்தில் புரட்சிகர முன்னேற்றமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
எப்படி உருவாக்கப்பட்டது?
என்டெரோமிக்ஸ் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின் பலனாக உருவானது. ஜீனோமிக் ப்ரொஃபைலிங் மற்றும் மியூட்டேஷன் ஆல்கொரிதம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு நோயாளியின் கட்டிக்கு ஏற்ப தனிப்பட்ட தடுப்பூசி உருவாக்கப்படுகிறது.
மற்ற புற்றுநோய் தடுப்பூசிகளிலிருந்து எவ்வாறு வித்தியாசமானது?
பாரம்பரிய புற்றுநோய் தடுப்பூசிகள் பொதுவாக "ஒரே முறை – அனைவருக்கும்" என்ற முறையில் செயல்பட்டன.
அவை அதிக அளவில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் என்டெரோமிக்ஸ் இரண்டு முக்கிய புதிய அம்சங்களை கொண்டுள்ளது:
தனிப்பட்ட வடிவமைப்பு: ஒவ்வொரு நோயாளியின் கட்டி மரபணு அடிப்படையில் தனித்துவமாக தயாரிக்கப்படுகிறது.
mRNA தளம்: விரைவாக தயாரிக்கவும், பரவலாக உற்பத்தி செய்யவும் உதவுகிறது. பல்வேறு புற்றுநோய்களுக்கு உடனடியாக மாற்றி அமைக்கவும் முடியும்.
இதனால், இது புற்றுநோய் தடுப்பூசிகளில் அடுத்த கட்ட முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
உலகளாவிய மற்றும் இந்திய நோயாளிகளுக்கு விளைவுகள்
என்டெரோமிக்ஸ் பரவலாக பயன்படுத்தப்படத் தொடங்கினால், அதன் தாக்கம் மிகப்பெரியது:
உலகளாவிய நோயாளிகளுக்கு: கடுமையான பக்கவிளைவுகள் கொண்ட கீமோதெரபி சிகிச்சையிலிருந்து விலகி, பாதுகாப்பான, தனிப்பட்ட சிகிச்சை பெறலாம்.
இந்திய நோயாளிகளுக்கு: இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகின்றன. மலிவான விலையில் இந்த தடுப்பூசி கிடைத்தால், புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆனால் சவால்களும் உள்ளன. குளிர் சங்கிலி (Cold chain) சேமிப்பு, ஜீனோமிக் பரிசோதனை கட்டமைப்பு மற்றும் செலவினம் ஆகியவை முக்கிய சவால்களாக இருக்கின்றன.
நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்: ஆரம்ப கட்ட பரிசோதனையின் வெற்றி இறுதியான விளைவுகளை உறுதி செய்யாது. பெரும் அளவிலான பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த பின்னரே இது உலகளாவிய அளவில் தரப்பட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|