அஞ்சலி டெண்டுல்கர் வாங்கிய புதிய வீடு - அதன் மதிப்பு
சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் வாங்கி வீடு - எவ்வளவு தெரியுமா?
சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கரின் புதிய வீடு பெறுமதி என்ன தெரியுமா
கிரிக்கெட் உலகில் "கடவுள்" என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார்.
சொத்து பதிவுகள் படி, மும்பையின் விராரில் (Virar) உள்ள பெனிசுலா ஹைட்ஸ் (Peninsula Heights) கட்டிடத்தில் 32 லட்சம் மதிப்பில் சிறிய அடுக்குமாடி குடியிருப்பு பெற்றுள்ளார்.
ரூ.32 லட்சத்தில் வாங்கப்பட்ட இந்த மூன்றாவது மாடி குடியிருப்பு 391 சதுர அடியில் அமைந்துள்ளது. 2025 மே 30ம் திகதி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இந்த சொத்திற்கு ரூ.1.92 லட்சம் முத்திரைத் தீர்வும், சலுகைக்குப் பிறகு ரூ.30,000 பதிவு கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பெண்கள் வீடு வாங்கும் போது 1% வரிச்சலுகை வழங்கப்படுவதால் அஞ்சலி டெண்டுல்கருக்கு கூடுதல் நன்மை கிடைத்துள்ளது.
அஞ்சலி டெண்டுல்கர்
குழந்தை மருத்துவரான அஞ்சலி டெண்டுல்கர், 1995 மே 24 அன்று சச்சின் டெண்டுல்கரை திருமணம் செய்து கொண்டார்.
மும்பை சர்வதேச பள்ளியில் தனது கல்வியை முடித்த இவர், பின்னர் கிராண்ட் மருத்துவ கல்லூரி மற்றும் சர். ஜே.ஜே மருத்துவமனையில் MBBS பட்டம் பெற்றார்.
சச்சின்-அஞ்சலி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், சமீபத்தில் சானியா சந்தோக் என்றவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மும்பையில் பல கோடி மதிப்பிலான சொத்துகளின் உரிமையாளர் என்பதையும், இப்போது அஞ்சலி டெண்டுல்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சின்ன வீடு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|