Home>தொழில்நுட்பம்>தொலைந்த தொலைபேசியை க...
தொழில்நுட்பம்

தொலைந்த தொலைபேசியை கண்டுப்பிடிக்கும் புதிய செயலி

bySite Admin|3 months ago
தொலைந்த தொலைபேசியை கண்டுப்பிடிக்கும் புதிய செயலி

சஞ்சார் சாத்தி செயலி மூலம் போன்கள், சிம் மோசடிகள் தடுப்பு

தொலைந்த தொலைபேசியை கண்டுப்பிடித்து தரும் புதிய செயலி - எப்படி பயன்படுத்துவது?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தொலைபேசி மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டது.

தொடர்பு, பணப்பரிவர்த்தனை, வேலை, பொழுதுபோக்கு என அன்றாட வாழ்வின் பல அம்சங்களில் அது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால், திருட்டு அல்லது தவறுதலால் தொலைந்து போன தொலைபேசிகளை மீண்டும் பெறுவது பெரும்பாலானவர்களுக்கு சாத்தியமற்றதாகவே தோன்றும்.


TamilMedia INLINE (50)


இந்நிலையில், மத்திய அரசின் தொலைதொடர்பு துறை அறிமுகப்படுத்திய சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற இணையதளம் மற்றும் செயலி, ஏற்கனவே 5 லட்சம் தொலைந்த தொலைபேசிகளை மீட்க உதவியுள்ளது.

இந்த தளத்தின் மூலம், தொலைபேசி தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், அதன் IMEI எண், தொலைந்த நேரம், இடம், பயனர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம்.

புகார் அளிக்கப்பட்டவுடன், அந்த செல்போன் யாராலும் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்க செய்யப்படும். பின்னர், அது கண்டுபிடிக்கப்பட்டதும் மீண்டும் செயல்படுத்தப்படும்.

மேலும், இந்த தளம் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன என்பதையும் கண்டறியும். நீங்கள் அனுமதி அளிக்காத சிம் கார்டுகள் இருந்தால், அதையும் புகார் அளித்து உடனடியாக செயலிழக்க செய்ய முடியும். இது சிம் மோசடிகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சஞ்சார் சாத்தி செயலியின் மூலம், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 29 லட்சம் சந்தேகத்திற்கிடமான மொபைல் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.

TamilMedia INLINE (51)



இந்த தளம் மற்றும் செயலி, சந்தேகத்திற்கிடமான போன் அழைப்புகள், SMS-கள், WhatsApp அழைப்புகள் குறித்தும் புகார் அளிக்க அனுமதிக்கிறது.

இதன் மூலம், தொலைந்த போன்கள் மீட்பதோடு மட்டுமல்லாமல், மொபைல் தொடர்பான பல்வேறு சைபர் குற்றங்களைத் தடுப்பதும் சாத்தியமாகியுள்ளது.