Home>விளையாட்டு>IPL 2026: டெல்லி கேப...
விளையாட்டு (கிரிக்கெட்)

IPL 2026: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன்?

byKirthiga|6 days ago
IPL 2026: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன்?

சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு விலகிய சஞ்சு சாம்சன் – புதிய அணி குறித்து வெளியான தகவல்

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனை முன்னிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டிரேட் மூலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் மினி ஏலத்துக்கான தயாரிப்புகள் தொடங்கியுள்ள நிலையில், எந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்திடம் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. அவருக்கும் அணியின் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பே இந்த முடிவுக்குக் காரணமாகும் என கூறப்படுகிறது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் அணியில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சமீபத்திய தகவல்களின் படி சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், இது குறித்து ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2013ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடங்கினார். பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து அங்கிருந்து சிறப்பாக விளையாடி வந்தார். இதுவரை அவர் 149 இன்னிங்ஸ்களில் விளையாடி, 2 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் மொத்தம் 4,219 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனின் புதிய அணியைப் பற்றிய உறுதியான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்