இலங்கை
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 112வது பிறந்தநாள்
bySuper Admin|2 months ago
மலையகத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 112வது பிறந்தநாள் நினைவு
இ.தொ.கா தலைமைச் செயலகத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் பிறந்தநாள் நிகழ்வுகள் நடைபெற்றன
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனின் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|