சாப்பிடாமல் ஒரு வருடம் உயிர் வாழும் உயிரினம் எது
சாப்பிடாமல் 1 வருடமும், சுவாசிக்காமல் 6 நாட்களும் வாழும் உயிரினம்
தேளின் அசாதாரண சகிப்புத்தன்மை
பூமியில் எண்ணற்ற விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் என பல்வேறு இனங்கள் வாழ்கின்றன.
ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான திறன்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளன.
ஆனால், சில உயிரினங்களின் சகிப்புத்தன்மை நம்மை வியக்க வைக்கும். அத்தகைய ஒரு உயிரினம் தான் தேள்.
பெரும்பாலானோருக்கு தேள் என்றால் உடனே நினைவிற்கு வருவது அதன் விஷம். ஆனால், தேளின் வாழ்க்கை முறை மற்றும் உடல் சக்தி பற்றி அறிந்தால் அதைவிட ஆச்சரியப்பட வைக்கும் பல விஷயங்கள் உள்ளன.
பாலைவனங்கள், வறண்ட மண், பாறைகள், காடுகள் என பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்வதற்கேற்ப தேள் தன்னைத் தழுவிக்கொண்டுள்ளது.
தேளின் உடலமைப்பு, புத்தகத்தின் பக்கங்களைப் போன்ற அமைப்புடைய சிறப்பு உறுப்புகளால் காற்றைச் சேமிக்க உதவுகிறது.
இதனால் வெளிப்புற ஆக்ஸிஜன் கிடைக்காத நேரத்திலும், உடலின் உள்ளக காற்றை பயன்படுத்தி 6 நாட்கள் வரை சுவாசமின்றியும் உயிர்வாழும் திறன் பெற்றுள்ளது.
இது மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட உயிர்வாழ உதவுகிறது.
தேளின் மற்றொரு அற்புதம், ஒரு வருடம் வரை உணவின்றி உயிர்வாழும் திறன். மிகக் குறைந்த ஆற்றல் பயன்பாடு, மந்தமான இயக்கம் மற்றும் நீர் சேமிப்பு திறன் ஆகியவை இதற்கு உதவுகின்றன.
பாலைவனங்கள் போன்ற வறண்ட பகுதிகளில் கூட குறைந்த தண்ணீரில் உயிர்வாழும் தன்மை தேளுக்கு உண்டு.
புற ஊதா (UV) ஒளி தேளின் உடலில் படும்போது அது பச்சை அல்லது நீல நிறத்தில் ஒளிரும். இந்த அதிசயமான தன்மை இன்னும் விஞ்ஞானிகளை குழப்புகிறது.
இதன் காரணம் தேளின் வெளிப்புறக் கட்டமைப்பில் உள்ள வேதிப்பொருள்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நம் நாட்டில் காணப்படும் இந்திய சிவப்பு தேள் (Indian Red Scorpion) உலகின் மிகவும் விஷமுள்ள தேள்களில் ஒன்றாகும். இதன் கடியால் கடுமையான வலி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
72 மணி நேரத்திற்குள் சிகிச்சை பெறாதால் உயிரிழப்பும் ஏற்படலாம். இது இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.