மலேசிய அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
தமிழர் வளர்ச்சி குறித்து மலேசிய அரசுடன் செந்தில் தொண்டமான் உரையாடல்
மலேசிய அரசுடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நடத்திய முக்கிய சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகத்தை சந்தித்து, முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் மலேசியா இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் வலியுறுத்தியதோடு, இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் சமூக உறவுகள் குறித்து சிறப்பாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சர்வதேச அரசியல் அரங்கில் தமிழர்களின் நிலையான அடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து தொண்டமான் வலியுறுத்தினார்.
மேலும், தமிழர் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பினரும் ஆழ்ந்த உரையாடல் மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பு தமிழர் சமூகத்தின் நிலை, அவர்களின் முன்னேற்ற வாய்ப்புகள் மற்றும் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் பங்காற்றலை வலுப்படுத்தும் வகையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|