உலக முதுகெலும்பு தினத்தில் சித்த மருத்துவ அறிவிப்பு
14–60 நாட்களில் சித்த மருத்துவ சிகிச்சை பெற மக்களுக்கு வழிகாட்டுதல்
முதுகெலும்பு நலத்திற்கும் நரம்பு நோய்களுக்கும் சித்த மருத்துவ விழிப்புணர்வு அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் திகதி உலக முதுகெலும்பு தினம் (World Spine Day) எனக் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் முதுகெலும்பின் நலத்தை உணர்த்தி, முதுகு வலி மற்றும் நரம்பு-எலும்பு தொடர்பான நோய்களைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். மனித உடலின் மையக் கம்பமாக செயல்படும் முதுகெலும்பு, உடல் அமைப்பைச் சீராக வைத்திருக்கும் முக்கிய உறுப்பாகவும், நரம்புக் குழாய்களைப் பாதுகாக்கும் முக்கிய பங்கையும் வகிக்கிறது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுதல், தவறான உடல் நிலைகள் (posture), சரியான உடற்பயிற்சி இல்லாமை, அதிக எடை மற்றும் மன அழுத்தம் போன்றவை முதுகு வலிக்கு முக்கிய காரணிகளாகின்றன. வேலை, வாசிப்பு அல்லது மொபைல்/கணினி பயன்படுத்தும் போது முதுகை நேராக வைத்திருத்தல், யோகா, நடைப்பயிற்சி மற்றும் நீட்டிப்பு பயிற்சிகள் முதுகு நலத்திற்கு உதவுகின்றன.
கல்சியம் மற்றும் விட்டமின் D நிறைந்த உணவுகள் எலும்புகளை வலுப்படுத்தும், ஆனால் அதிக எடை மற்றும் நீண்ட நேரம் அமர்தல், கனமான பொருட்களை தவறாக தூக்கும் பழக்கம் முதுகெலும்பு நலத்தை பாதிக்கின்றன. முதுகெலும்பு நோய்கள், நரம்பு செயலிழப்பு, கைகள் மற்றும் கால்கள் இயங்காமை போன்ற விளைவுகள் தாமதமான சிகிச்சை மூலம் கூட வாழ்க்கையை மாற்றக்கூடும்.
அதிக முக்கியமாக, முதலில் கட்டாயமாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு பின்னர் 14 முதல் 60 நாட்களுக்குள் அரசு சித்தமருத்துவ சிகிச்சை பெறவேண்டும். இதனால் நோயாளர்கள் முழுமையாக குணமடைய வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பலர் படுக்கையில் கிடக்கிறார்கள். சித்த மருத்துவம் செயலிழந்த அங்கங்களை மீண்டும் இயங்கச் செய்யும் சக்தியை வழங்குகிறது.
சித்த மருத்துவத்தில் நோய் காரணமான வாத, பித்த, கபம் மூன்று தோஷங்களின் சமநிலையே ஆரோக்கியத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. நரம்பு நோய்கள் பெரும்பாலும் வாத துஷ்டி காரணமாக உருவாகும். வாதம் உடலின் இயக்க சக்தி, நரம்பு கடத்தல், சிந்தனை மற்றும் உறக்க கட்டுப்பாடு போன்ற செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும்.
வாதத்தை அதிகரிக்கும் காரணிகள்: குளிர்ச்சியான உணவு, நீண்ட நேர உழைப்பு, மன அழுத்தம், நரம்பு உளைச்சல், இரத்த ஓட்டக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு. இதனால் அரைபக்கவாதம், ஸ்ட்ரோக், நரம்பு வலி, நியுரோபதி, சைகாட்டிகா, நரம்பு நடுக்கம், பார்கின்சனிசம் போன்ற நிலைகள் உருவாகக்கூடும்.
சித்த சிகிச்சை மூன்று முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
நித்திய நலம் – உடல் சமநிலையை பேணுதல்
நோய் நீக்கம் – காரண வாதத்தை சமப்படுத்துதல்
மீளச்சீராக்கம் – நரம்பு மறுசீரமைப்பு (Neuroregeneration)
சித்த மருத்துவத்தில் உள்சிகிச்சைகள் (Internal Medicines), புறசிகிச்சைகள் (External Therapies), ஆதரவு சிகிச்சைகள் (யோகாசனம் & பிராணாயாமம்), மற்றும் உணவியல் (Dietotherapy) ஆகியவை நரம்பு நோய்களில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆய்வுகள் சித்த மருந்துகளில் காணப்படும் மூலிகைகள் (e.g. Withania somnifera, Moringa oleifera, Nardostachys jatamansi) நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் neuroprotective, antioxidant, anti-inflammatory செயல்பாடுகளை கொண்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளன.
அக்டோபர் 16 அன்று அரசு வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நரம்பியல் பிரிவு வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பில், மக்கள் 14-60 நாட்களுக்குள் அரசு சித்தமருத்துவமனைகளை நாடி, முதுகெலும்பு மற்றும் நரம்பு நலத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டனர். நாட்டில் பல பிரதேசங்களில் (கம்பஹா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, மாதம்பே, கொடிகாமம் போன்ற) அரசு சித்த மருத்துவமனைகள் மற்றும் இலவச சுதேச மருத்துவமனைகள் மூலம் மக்கள் தேவையான சேவைகளைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகெலும்பு நோய்கள், நரம்பு செயலிழப்புகள் மற்றும் வாழ்க்கைத் தடைகள் கொண்ட நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் நம்பிக்கை ஒளியாக இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும், நோயாளிகளுக்கும் “இன்னும் நம்பிக்கை உள்ளது” என்பதை பரப்புவது சமூக பொறுப்பு என்றும் அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|