தமிழகத்தின் கர்ணன் - 310 கோடி நன்கொடை வழங்கிய வள்ளல்
திரையில் கர்ணன்… வாழ்க்கையில் வள்ளல் – சிவாஜி கணேசனின் அரிய மனிதநேயம்
வள்ளல் குணத்தால் புகழ்பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சினிமா உலகில் "நடிப்பின் கடவுள்" என அழைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திரையிலும், வாழ்க்கையிலும் ஒரே மாதிரியாக கருணைமிகு வள்ளலாக வாழ்ந்தவர்.
1953 முதல் 1993 வரை 40 ஆண்டுகளில் மட்டும், ரூ.310 கோடியே அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது அவரது அரிய குணத்தை வெளிப்படுத்துகிறது.
அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள்வரை யாருக்கு உதவி தேவைப்பட்டாலும், தன்னுடைய "சிவந்த கைகள்" அதை வழங்கியுள்ளன.
திருச்சியின் ஜமால் முகமது கல்லூரி, வேலூரின் மருத்துவமனை, திருவள்ளுவர் சிலை, அம்பேத்கர் சிலை, கட்டபொம்மன் சிலை என பல்வேறு சமூக, கல்வி, கலாச்சார முயற்சிகளுக்கு பெரும் நிதி அளித்தவர்.
அதோடு பேரிடர் காலங்களில் உடனே உதவி செய்து, மக்களின் உயிர் காப்பாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
288 படங்களில் பன்முகமான கதாபாத்திரங்களை செய்து புகழ் பெற்ற சிவாஜி கணேசன், தனது வாழ்க்கையிலும் உண்மையான கர்ணனாகியதால் தான் இன்றும் மக்கள் மனதில் "வள்ளல் சிவாஜி" என வாழ்ந்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|