ஈரமான கூந்தலுடன் தூங்குவதால் என்ன நடக்கும்?
ஸ்கால்ப் ஆரோக்கியத்துக்கு பெரிய பாதிப்பு – எச்சரிக்கும் டாக்டர்கள்
முடி சேதம் முதல் முகப்பரு வரை - ஈரமான முடியின் ஆபத்துகள்
பல பெண்கள் இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்து குளித்து, தலைமுடி இன்னும் ஈரமாக இருக்கும்போதே தூங்குவதைக் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இது பாதிப்பில்லாதது என்று நினைத்தாலும், உண்மையில் ஈரமான கூந்தலுடன் தூங்குவது பல ஆரோக்கிய பிரச்சனைகளை உருவாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஸ்கால்ப் ஆரோக்கியம் பாதிக்கும்
ஈரமான முடி நீண்ட நேரம் தலை மேல் சருமத்தில் (scalp) ஒட்டியிருப்பதால், மலாசீசியா எனப்படும் பூஞ்சை அதிகமாக வளர்ச்சி அடையும். இதனால் பொடுகு, எரிச்சல், தோல் உரிதல், செபோர்ஹெக் டெர்மடிடிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
முடி பலவீனமடையும்
ஈரமான முடி தலையணையில் உராய்வதால் கூந்தல் எளிதில் உடையும். நீண்ட நாட்களில் இது முடி அடர்த்தி குறைவு மற்றும் ஸ்கால்ப் சென்சிட்டிவிட்டிக்கு வழிவகுக்கும்.
முக சருமத்தில் பிரச்சனைகள்
ஈரமான முடியில் இருந்து சொட்டும் நீர், scalp oil, தலையணை மூலம் முகத்திற்குப் பரவும் பாக்டீரியா – இவை அனைத்தும் முகப்பரு மற்றும் skin irritation-க்கு காரணமாகின்றன. ஏற்கனவே முகப்பரு கொண்டவர்கள் இந்த பழக்கத்தால் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
கூடுதல் ஆபத்துகள்
1. சைனஸ் பிரஷர் மற்றும் தலைவலி ஏற்படும் வாய்ப்பு
2. பூஞ்சை அதிகரித்து scalp inflammation
3. தேவையற்ற சரும எரிச்சல் மற்றும் சிவத்தல்
மருத்துவர்களின் பரிந்துரைகள்
1. தூங்குவதற்கு முன் முடி குறைந்தபட்சம் 80–90% காயவைக்கவும்
2. ஹேர் ட்ரையர் பயன்படுத்தலாம்
3. சாடின் அல்லது பட்டு தலையணை உறைகள் பயன்படுத்தவும்
4. ஈரமான முடியை தளர்வாக பின்னி வைக்கவும்
5. அதிகப்படியான hair products இரவு நேரத்தில் தவிர்க்கவும்
ஓரிரு முறை ஈரமான முடியுடன் தூங்குவதால் பெரும் பாதிப்பு இருக்காமல் இருக்கலாம்.
ஆனால் அதை வழக்கமாக்கினால், நிச்சயம் scalp பிரச்சனைகள், பொடுகு, முடி சேதம் மற்றும் முகப்பரு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.