Home>உலகம்>இருளில் முழ்கும் பூம...
உலகம்

இருளில் முழ்கும் பூமி - எப்போது சூரிய கிரகணம் தெரியுமா?

byKirthiga|about 2 months ago
இருளில் முழ்கும் பூமி - எப்போது சூரிய கிரகணம் தெரியுமா?

செப்டம்பர் 21 சூரிய கிரகணம் – எங்கு தெரியுமா?

2025ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் – எப்போது, எங்கு தெரியும்?

2025ஆம் ஆண்டு நான்கு கிரகணங்கள் நிகழும் என்று வானியலாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதில் இரண்டு சூரிய கிரகணமும், இரண்டு சந்திர கிரகணமும் அடங்கும்.

ஏற்கனவே ஒன்று சூரிய கிரகணமும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழ்ந்து விட்டன. இப்போது மாத இறுதியில் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

கிரகண நாள் மற்றும் நேரம்

2025 செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை நாளில் இந்த சூரிய கிரகணம் நிகழும். இது இரவு 11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3.23 வரை நீடிக்கும்.

இந்தியாவில் தெரியுமா?

இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் நிகழ்வதால், இந்தியாவில் பொதுமக்கள் கண்களால் பார்க்க முடியாது.

Selected image


எங்கு தெரியும்?

இந்த சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல் உள்ளிட்ட இடங்களில் தெளிவாகக் காணப்படும். குறிப்பாக நியூசிலாந்தின் வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச் மற்றும் பாலினீசியா, மெலனேசியா தீவுகளின் மக்களுக்கு இது மறக்கமுடியாத வானியல் நிகழ்வாக அமையும்.

உலகின் எதிர்பார்ப்பு

இந்தியாவில் தெரியாவிட்டாலும், உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இந்த சூரிய கிரகணத்தைப் பதிவு செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்