Home>இலங்கை>பிளாஸ்டிக் பைகளின் இ...
இலங்கை

பிளாஸ்டிக் பைகளின் இலவச விநியோகம் நிறுத்தம்

byKirthiga|about 1 month ago
பிளாஸ்டிக் பைகளின் இலவச விநியோகம் நிறுத்தம்

நவம்பர் 1 முதல் இலவச பிளாஸ்டிக் பைகள் தடை – நுகர்வோர் ஆணைக்குழு அறிவிப்பு

கடைகளில் இலவச பிளாஸ்டிக் பைகள் வழங்குதல் சட்டவிரோதம் – புதிய கசேட் வெளியீடு

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு இலவசமாக பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் (Shopping Bags) வழங்குவதை நிறுத்தும் வகையில் விசேட கசேட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நுகர்வோர் விவகார ஆணைக்குழு தலைவர் ஹேமந்த சமரகෝன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கசேட்டின்படி, எந்த வியாபாரியும் தமது கடையில் பொருட்களை விற்பனை செய்யும் போது, நுகர்வோருக்கு இலவசமாக பிளாஸ்டிக் பைகள் வழங்கக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் விலை கட்டாயம் பில்லில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் குறைந்த அடர்த்தியிலான பாலிஎத்திலீன் (Low-Density Polyethylene - LDPE) மற்றும் லினியர் குறைந்த அடர்த்தியிலான பாலிஎத்திலீன் (Linear Low-Density Polyethylene - LLDPE) கொண்டு தயாரிக்கப்பட்ட பைகளுக்கு பொருந்தும்.

பொதுவாக “பொலி்த்தீன்” என்று அழைக்கப்படும், கைப்பிடியுடன் பொருட்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பைகள் எந்த அளவில் இருந்தாலும், நவம்பர் 1, 2025 முதல் இந்த புதிய விதிமுறையின் கீழ் தடை செய்யப்பட உள்ளன.

இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.