குழந்தைகளுக்கு உடல் தண்டனை தடை – விளக்கம் வெளியீடு
குழந்தைகளுக்கு உடல் தண்டனை தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில்
பள்ளிகளில் உடல் தண்டனை தடுப்பு வழிகாட்டி விரைவில் – கல்வி அமைச்சு
குழந்தைகளுக்கு உடல் தண்டனை வழங்குவதைத் தடை செய்யும் வகையில் குற்றவியல் சட்டத்தில் (Penal Code) திருத்தம் செய்யும் மசோதா, மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், தேவையானால் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் அல்லது உத்தரவுகளை கல்வி அமைச்சு வெளியிடும் என அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் அமைச்சரவையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டன. இதில், குழந்தைகளுக்கு உடல் தண்டனை வழங்குவதால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை தடுக்க சட்ட ரீதியான தடை விதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், குழந்தைகளுக்கு உடல் தண்டனை அவர்கள் உடல்நலத்திற்கும் வளர்ச்சிக்கும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் சுமார் 1.2 பில்லியன் குழந்தைகள் (0–18 வயது) தங்கள் இல்லங்களில் ஆண்டுதோறும் உடல் தண்டனைக்கு உள்ளாகின்றனர் எனவும், பள்ளிகளிலும் இந்த நடைமுறை பரவலாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், இலங்கையில் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி சூழலில் சீர்திருத்தம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|