Home>இலங்கை>முன்னாள் ஜனாதிபதிகளு...
இலங்கைஅரசியல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரசுச் செலவுகள் வெளியீடு

byKirthiga|about 2 months ago
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரசுச் செலவுகள் வெளியீடு

2017 முதல் 2025 வரை முன்னாள் ஜனாதிபதிகள், விதவைகளுக்கான செலவுகள் வெளியீடு

சம்பளம், கொடுப்பனவு மற்றும் பிற செலவுகள் விவரம் பகிர்ந்த அரசு

அரசாங்கம், 2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக செலுத்தப்பட்ட சம்பளம், கொடுப்பனவு மற்றும் பிற செலவுகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், ஹேமா பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கான செலவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சம்பளங்கள், கொடுப்பனவுகள் மற்றும் அரசால் வழங்கப்பட்ட பிற செலவுகள் குறித்த விரிவான பிரிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Selected image


Selected image


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்