Home>வணிகம்>செப்டம்பரில் பணவீக்க...
வணிகம்

செப்டம்பரில் பணவீக்கம் 2.1% ஆக உயர்வு

byKirthiga|18 days ago
செப்டம்பரில் பணவீக்கம் 2.1% ஆக உயர்வு

ஆகஸ்டில் 1.5% இருந்த பணவீக்கம் செப்டம்பரில் 2.1% ஆக உயர்ந்தது

செப்டம்பரில் நாட்டின் மொத்த பணவீக்கம் 2.1% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில் அளவிடப்படும் மொத்த பணவீக்கம், 2025 ஆகஸ்டில் 1.5% இருந்ததை ஒப்பிடும்போது, 2025 செப்டம்பரில் 2.1% ஆக உயர்ந்துள்ளதாக கணக்கியல் மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உணவு பொருட்களின் பணவீக்கம் ஆகஸ்டில் 2.9% இருந்ததை ஒப்பிடும்போது செப்டம்பரில் 3.8% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உணவு அல்லாத பொருட்களின் ஆண்டு தோறும் பணவீக்கம் ஆகஸ்டில் 0.4% இருந்ததை ஒப்பிடும்போது கடந்த மாதம் 0.7% ஆக உயர்ந்துள்ளது.

உணவுப் பொருட்கள் பணவீக்கத்தில் வழங்கிய பங்களிப்பு செப்டம்பரில் 1.68% ஆக பதிவாகியுள்ளது. இது 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரிப்பாகும்.

2025 செப்டம்பர் மாதத்திற்கான மொத்த நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) 207.4 என பதிவாகியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது 0.2 புள்ளிகள் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்