2024இல் இலங்கையில் திருமணங்கள் 8% குறைவு
பொருளாதார சவால்களுக்கிடையில் இலங்கையில் திருமணமும் பிறப்பும் குறைந்தன
இலங்கையில் 2024ஆம் ஆண்டு திருமணங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு மொத்தம் 1,39,290 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது 2023ஆம் ஆண்டை விட 8 சதவீதம் குறைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது நாடு முழுவதும் 1,71,140 திருமணங்கள் நடைபெற்றிருந்தன.
இதற்கு முன், பிறப்புகளின் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் காட்டின. அந்த அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டு 2,20,761 பிறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2020ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 3,01,706 ஆக இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|