நவம்பர் 30 முதல் கார்டு மூலம் பேருந்து கட்டணம்
வங்கி கார்டுகளால் பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி நவம்பர் 30 முதல் அமலில்
நவம்பர் 30 முதல் பேருந்துகளில் கார்டு மூலம் கட்டண வசதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்கே
வரும் நவம்பர் 30, 2025 முதல், பயணிகள் வங்கி வெளியிட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக உள்ள பிமல் ரத்நாயக்கே தெரிவித்துள்ளார்,
இது குறித்து இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது அமைச்சர் இந்தத் தகவலை வெளிப்படுத்தினார். கட்டண இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் கார்டு மூலம் கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், புதிய வாகன எண் பலகைகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விளக்கமளித்தார். கடந்த செப்டம்பர் 30, 2025 வரை மொத்தம் 1,65,512 எண் பலகைகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:
“புதிய வாகன எண் பலகைகளில் ஏழு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை பரிசோதிக்கும் பொறுப்பு இலங்கையில் உள்ள மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் 6 அம்சங்களையே பரிசோதிக்க முடிந்தது. ஏழாவது அம்சத்தை சர்வதேச அளவில் பரிசோதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியே இதற்குக் காரணம்,” என விளக்கமளித்தார்.
மேலும், புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கே உறுதியளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|