Home>இலங்கை>மலேசிய அழகுக்கலைப் ப...
இலங்கை

மலேசிய அழகுக்கலைப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

byKirthiga|22 days ago
மலேசிய அழகுக்கலைப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

யாழ் சுலக்‌ஷனாவுக்கு மலேசியப் போட்டியில் இரு பதக்கங்கள்

ஆசிய அழகுக்கலைப் போட்டியில் இலங்கைக்கு ஐந்து பதக்கங்கள் – யாழ் சுலக்‌ஷனா இரு வெற்றிகள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்தவாறு மொத்தம் ஐந்து பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதில் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளரான சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளன.

அதேபோல் கண்டியைச் சேர்ந்த எல். தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்கள் சர்வதேச அரங்கில் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.


Selected image


இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஏழு அழகுக்கலை நிபுணர்கள் பங்கேற்றனர். இவர்களை நயகரா சலூன் அண்ட் அகாடமியின் இயக்குநர் கயல்விழி ஜெயபிரகாஷ் வழிநடத்தினார்.

ஆசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.


Selected image


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்