Home>இலங்கை>வெளிநாட்டு பாம்புகளை...
இலங்கை

வெளிநாட்டு பாம்புகளை கடத்த முயன்ற பெண் கைது

byKirthiga|about 2 months ago
வெளிநாட்டு பாம்புகளை கடத்த முயன்ற பெண் கைது

கொழும்பு விமான நிலையத்தில் 6 வகை அபூர்வ பாம்புகள் பறிமுதல்

விமான நிலையத்தில் வெளிநாட்டு பாம்புகளுடன் இலங்கை பெண் கைது

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், ஆறு வகையான வெளிநாட்டு பாம்புகளை கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கத்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவும், உயிர் பல்வகைமை, பண்பாடு மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையிலேயே இக்கைது மேற்கொள்ளப்பட்டது.

40 வயதுடைய குறித்த பெண், வங்கக்கொக்கிலிருந்து சென்னை வழியாக வந்த இந்திகோ ஏர்லைன்ஸ் (6E1173) விமானத்தில் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்.

அவரது பயணப்பையை சோதனையிட்ட அதிகாரிகள், பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வ பாம்புகளை கண்டுபிடித்தனர்.

Selected image


அவர் கொண்டு வந்த பாம்பு இனங்களில் Speckled Kingsnake, Yellow Anaconda, Honduran Milk Snake, மற்றும் Ball Python உள்ளிட்டவை அடங்குகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புடையதாக, சுங்கச் சட்டம், விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்