Home>உலகம்>சுந்தர் பிச்சை பார்ப...
உலகம்

சுந்தர் பிச்சை பார்ப்பது Google இல்லை

bySite Admin|3 months ago
சுந்தர் பிச்சை பார்ப்பது Google இல்லை

சுந்தர் பிச்சை தினமும் பார்ப்பது இந்த வலைத்தளம் தான்!

சுந்தர் பிச்சை தினமும் காலையில் பார்ப்பது கூகுள் அல்ல – அந்த வலைத்தளம் இதுதான்!

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, உலகின் மிகுந்த செல்வாக்கு கொண்ட டெக் நிர்வாகிகளில் ஒருவர்.

அவரைப் போல வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள், அவரது வாழ்க்கை முறையில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

பெரும்பாலானவர்கள் அவர் காலை எழுந்ததும் முதலில் கூகுள் (Google) பக்கத்தையே பார்ப்பார் என நினைப்பர். ஆனால் உண்மையில் அது முற்றிலும் தவறு.

கூகுள் அல்ல, Techmeme தான்!

சுந்தர் பிச்சை காலை எழுந்ததும் முதலில் பார்ப்பது ‘Techmeme’ எனப்படும் ஒரு தொழில்நுட்ப செய்தி ஒருங்கிணைப்புத் தளம். இந்த தளம் உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப துறையின் முக்கியமான செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்து வழங்குகிறது.

Bloomberg, CNBC, The Verge போன்ற முன்னணி ஊடகங்களின் தொழில்நுட்ப கட்டுரைகள் இதில் காணப்படும்.

TamilMedia INLINE (97)


Techmeme தளத்தின் ரசிகர்களில் சுந்தர் பிச்சை மட்டும் அல்ல. மெட்டா நிறுவனத்தின் CTO ஆன்ட்ரீவ் போஸ்வொர்த், இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸ்ஸேரி, மெட்டா CEO மார்க் சக்கர்பெர்க் ஆகியோரும் தினசரி இந்த தளத்தை பார்வையிடுகின்றனர்.

மைக்ரோசாப்ட் (Microsoft) CEO சத்யா நாதெல்லா (Satya Nadella), லிங்க்ட்இன் (LinkedIn) நிர்வாகத் தலைவர் ஜெஃப் வீனர் (Jeff Bezos), முன்னாள் பேபால் நிர்வாகி டேவிட் மார்கஸ், முன்னாள் ட்விட்டர் CEO டிக் காஸ்டோலோ ஆகியோரும் இதே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் நேரத்தை விரயம் செய்வதை விட, காலை நேரத்தில் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்வதே முக்கியம் என்று இந்த உதாரணம் காட்டுகிறது.

சுந்தர் பிச்சை போன்ற முன்னணி நிர்வாகிகள் தினசரி தங்கள் துறையுடன் தொடர்புடைய தகவல்களை முதலில் அறிந்து கொள்வதை முன்னுரிமையாகக் கொள்கின்றனர்.

TamilMedia INLINE (98)


டிம் குக் மட்டும் வேறுபட்டவர்

அப்பிள் CEO டிம் குக், Techmeme-க்கு பதிலாக, தினமும் காலையில் வாடிக்கையாளர் கருத்து மின்னஞ்சல்களைப் படிப்பதைத் தான் தனது நாளின் முதல் செயலாகக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை நேரடியாக அறிய முடிகிறது.