மிக வலுவான புயல் - ஹாங்காங்கை நோக்கி ரகாசா புயல்
ஹாங்காங்கில் பள்ளிகள் மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து
பிலிப்பைன்சில் மூவர் பலி – தைவானில் கனமழை எச்சரிக்கை
ஹாங்காங்கை நோக்கி உலகின் மிக வலுவான சூப்பர் புயலான "ரகாசா" புயல் முன்னேறி வருகிறது. மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் உருவாகியுள்ள இந்த புயல், அண்மைக் காலத்தில் ஹாங்காங்கை தாக்கும் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
செப்டம்பர் 23, செவ்வாய்க்கிழமை, ஹாங்காங்கில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சீனாவின் கரையோர மாகாணங்களில் குறைந்தது 10 நகரங்களில் அரசு, பள்ளிகளையும் தொழில் நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.
தைவானில் இந்த புயல் நேரடியாக தாக்காது என்றாலும், அதன் வெளிப்புற வளையங்களால் கிழக்கு கரையோரத்தில் கனமழை பெய்து வருகிறது.
கடல் எச்சரிக்கை இன்னும் அமலில் இருந்தாலும், நில எச்சரிக்கை காலை 8.30 மணிக்கு நீக்கப்பட்டது. மழை இரவு முழுவதும் நீடிக்கும் என தைவான் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கின் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வான் சாய் பகுதி பொதுவாக மக்கள் குவியும் சந்தையாக இருந்தாலும், சூப்பர் புயல் எச்சரிக்கையால் பல கடைகள் மூடப்பட்டன.
திறந்திருக்கும் கடைகளும் வழக்கத்திற்கு முன்பே மூடுவதாக அறிவித்துள்ளன. வானிலை மையம் பிற்பகல் 2.20 மணிக்கு எச்சரிக்கை அளவை T8 ஆக உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உள்ளூர் மக்கள் மளிகை பொருட்களை குவித்து வாங்க தொடங்கியுள்ளனர். பால், இறைச்சி போன்றவை விற்றுத் தீர, காய்கறிகளின் விலை மூன்றாம் மடங்கு உயர்ந்துள்ளது.
சில சூப்பர் மார்க்கெட்களில் வெற்று அலமாரிகள் காட்சியளித்தன.
பிலிப்பைன்சில் மூவர் பலி. வட பிலிப்பைன்சை நேற்று தாக்கிய புயலில் மூவர் உயிரிழந்துள்ளனர். பெங்கெட் மாகாணத்தில் மலைச்சரிவு காரணமாக வாகனங்கள் புதையுண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
Super Typhoon Ragasaகலயான் தீவுக்கூட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
புயல் ரகாசா தற்போது தென் சீனக் கடலை மேற்குக்-வடமேற்குப் பாதையில் கடந்து குவாங்டாங் மாகாணக் கரையை அணுகுகிறது. ஹாங்காங்க் வானிலை மையம் வலுவான காற்று எச்சரிக்கையை ஏற்கனவே வெளியிட்டு, அதை இன்று இரவு அல்லது நாளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2018இல் தாக்கிய மங்க்குட் புயலுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு இந்த சூப்பர் புயல் ஹாங்காங்கில் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|