Home>இந்தியா>தீபாவளி பட்டாசு வெடி...
இந்தியா

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் நிர்ணயம்!

byKirthiga|25 days ago
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் நிர்ணயம்!

தீபாவளி தினம் காலை 6–7 மணி, மாலை 7–8 மணி வரை மட்டும் அனுமதி

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியது

தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதனால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசுபாடு பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் அளித்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசு பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவித்தது.

அதன்படி, தமிழ்நாடு அரசு இந்த ஆண்டும் அதே விதிமுறையை தொடர்ந்து செயல்படுத்துகிறது. 2025ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மற்றும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மக்கள் அனைவரும் விதிகளை மதித்து, பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்