பாடகி Taylor Swift நிச்சயதார்த்தம் - அசத்தல் அறிவிப்பு
டிராவிஸ் கெல்ஸுடனான நிச்சயதார்த்தத்தை டெய்லர் ஸ்விஃப்ட் அறிவித்தார்
பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் NFL வீரர் டிராவிஸ் கெல்ஸ் – நிச்சயதார்த்த செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift), அமெரிக்கன் புட்பால் (NFL) வீரர் டிராவிஸ் கெல்ஸுடனான (Travis Kelce) தனது நிச்சயதார்த்தத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் இவர்களுக்கிடையில் காதல் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், பல முறை இருவரும் சேர்ந்து பொது இடங்களில் தோன்றியதும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
சமீபத்தில் டெய்லர் ஸ்விஃப்ட் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் நிச்சயதார்த்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தி வெளியாகிய சில நிமிடங்களுக்குள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே டிரெண்டாகி, சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்திகள் பெருகி வருகின்றன.
இசை உலகின் சூப்பர் ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அமெரிக்க நட்சத்திரம் டிராவிஸ் கெல்ஸ் ஆகியோரின் இணைப்பு ஹாலிவுட் உலகில் பேசப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
ரசிகர்கள் தற்போது இவர்களின் திருமண திகதி ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள். மேலும் இவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|