இது தெரியாம Tech பயன்படுத்தினா பண இழப்பு நிச்சயம்!
Tech பயன்படுத்த முன் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை இதோ..
இன்று நம்மைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக நிகழ்ந்து வருகிறது.
நமது கைபேசி, வங்கி பயன்பாடுகள், ஒன்லைன் பரிமாற்றங்கள், வட்ஸ்அப் முதல் உபயோகப்படும் AI அப்ளிக்கேஷன்கள் வரை அனைத்தும் நம்மை ஒருவிதமாக நம்ப வைக்கின்றன என்பது யதார்த்தமான ஒன்றாக காணப்படுகின்றது.
ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் நமக்கு நன்மை தருமா? இல்லையென்றால் இவை மூலமாக நாம் பணத்தை இழக்கிறோமா?
இங்கு சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் தான், அறிவும் கவனமும் இல்லாமல் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், நம்மை பாதுகாப்பு குறைவான நிலைக்கு கொண்டு செல்கிறது.
தற்காலத்தில் பலர் OTP பகிர்ந்துவிடுகிறார்கள், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட தகவல்களை பரப்புகிறார்கள், அல்லது படிப்பதற்கே தயங்கி, புதிய அப்ளிக்கேஷன்களை நிறுவுகிறார்கள்.
இது போன்ற தவறுகள் நம்மை நேரடியாக நிதி இழப்புக்குள்ளாக்கும். இவற்றுக்கான எளிமையான உதாரணம் எடுத்துக்கொள்வோமேயானால், நீங்கள் ஒரு புதிய QR கோடைக் காண்கிறீர்கள். அதில் "cashback கிடைக்கும்" என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதனை scan செய்வதும், அங்குள்ள தொகையை அனுப்புவதும் செய்யும் போது, உங்கள் பங்க் கணக்கிலிருந்து பணம் பறிபோகும்.
இது போன்ற மோசடிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் காரணம் முழுமையான தகவல் இல்லாத நம்பிக்கை.
பாதுகாப்பாக தொழில்நுட்பத்தை அணுகும் பழக்கம் வேண்டும்
தொழில்நுட்பம் தவறல்ல. ஆனால் அதைப் பயன்படுத்தும் முறையில் பொறுப்பும் விழிப்புணர்வும் அவசியம்.
நீங்கள் பயன்படுத்தும் எந்த அப்ளிக்கேஷனும் உங்கள் பணத்துடன் நேரடி தொடர்பு வைத்திருக்கலாம்.
ஆகவே, உங்கள் அனுமதியை கேட்டுவிட்டு install ஆகும் அப்ளிக்கேஷன்களுக்கு முன்பாக, அதன் Privacy Policy, Access Permissions, மற்றும் User Reviews போன்றவற்றைப் படிக்க வேண்டும்.
மேலும், உங்கள் நிதி தொடர்பான செயலிகளுக்கு எப்போதும் 2-step verification அல்லது OTP Authentication போன்ற பாதுகாப்பு முறைகள் இருந்தே ஆக வேண்டும்.
பொதுவாக, வேகமாக பணம் அனுப்பிக் கொள்ளும் செயலிகள் மிகவும் வசதியானவை என்றாலும், அது உங்கள் அலட்சியத்தால் மோசடி செய்யக்கூடிய குற்றவாளிகளுக்கு ஒரு வாயிலைத் திறக்கக்கூடும்.
அதேபோல, கடவுச்சொற்கள் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பலர் இன்றும் "123456" அல்லது "abcd1234" போன்று எளிதாக ஊகிக்கக் கூடிய கடவுச்சொற்களையே பயன்படுத்துகிறார்கள்.
இது உங்கள் பணம் மட்டும் அல்ல, உங்கள் அடையாளத்தையும் ஆபத்துக்குள்ளாக்கும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு முன் சிறிய ஆய்வு செய்வது, உங்கள் பணத்தை பாதுகாக்கும் முதல் படியாக காணப்படும்.
ஒரு App, ஒரு மெசேஜ், அல்லது ஒரு Website எதையும் புரிந்துகொள்ளாமல் பயன்படுத்தும் பழக்கம் இருக்கக்கூடாது. நாம் சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வு, நமக்கு பல்லாயிரம் ரூபாய்கள் சேமிக்க உதவும்.
அதற்காக, தொழில்நுட்பத்தை பயந்து விலக வேண்டியதில்லை. ஆனால் அதை புரிந்து உபயோகிக்க வேண்டும். அநேகமானோர் “எல்லாருமே இதை பயன்படுத்தறாங்க” என்று சொல்லி follow பண்ணுகிறார்கள்.
ஆனால் நமக்கு சரியான தகவல் இல்லாமல் நம்மால் follow பண்ணும்போது, அதுவே நிதி இழப்புக்கும், தனிப்பட்ட தகவல் கசிவுக்கும் வழிவகுக்கும்.