இந்தியாவில் பெரும் விபத்து: 16 பேர் பலி, 8 பேர் காயம்
தெலுங்கானா மாநிலத்தில் பேருந்து–லாரி மோதி 16 பேர் உயிரிழப்பு
செவெல்லா சாலையில் பேருந்து–லாரி மோதல்
தெலுங்கானா மாநிலத்தின் செவெல்லா பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை பரிதாபகரமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று எதிரே வந்த தெலுங்கானா மாநில பேருந்து (TSRTC) மீது மோதியதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செவெல்லா அருகே நேர்ந்த இந்த விபத்தில், மோதலின் தாக்கம் காரணமாக லாரியில் இருந்த மணல் மற்றும் கற்கள் பேருந்தின் மீது சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல பயணிகள் பேருந்துக்குள் சிக்கிய நிலையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது, “மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்” என தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தின் காரணமாக செவெல்லா சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|