Home>கல்வி>ஆண்டுதோறும் கோடிக்கண...
கல்வி

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான உயிரை வாங்கும் உயிரினம்

byKirthiga|about 1 month ago
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான உயிரை வாங்கும் உயிரினம்

உலகின் மிக ஆபத்தான உயிரினம் – மனிதனைவிட கொல்லும் சிறிய உயிர்!

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கும் இந்தச் சிறிய விலங்கு யார் தெரியுமா?

பூமியில் மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் விலங்கு எது என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் சிங்கம், புலி அல்லது பாம்பு என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் மனிதனுக்கு அதிகம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவது இந்தச் சிறிய உயிர் தான் நுளம்பு.

உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, நுளம்புகள் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 7 லட்சம் முதல் 10 லட்சம் மக்களின் மரணத்துக்குக் காரணமாகின்றன. இது சிங்கம், பாம்பு, முதலை போன்ற எந்த விலங்கையும் விட மிக அதிகம்.

நுளம்புகள் நேரடியாக மனிதரைத் தாக்காது, ஆனால் அவை பரப்பும் நோய்கள் தான் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ், பிலேரியா போன்ற பல நோய்களை அவை பரப்புகின்றன. குறிப்பாக மலேரியா ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை பறிக்கிறது.

டெங்கு காய்ச்சல் தற்போது நகர்ப்புறங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று கடுமையாக மாறும் போது இரத்த அணுக்கள் குறைந்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் சிக்குன்குனியா நோயால் கடுமையான மூட்டு வலி, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு நீண்ட நாட்களாக நீடிக்கலாம்.

அச்சமூட்டுவது என்னவெனில், காலநிலை மாற்றம் காரணமாக கொசுக்கள் தற்போது குளிரான பிரதேசங்களிலும் வாழத் தொடங்கியுள்ளன. இதனால் அவை பரப்பும் நோய்கள் உலகின் பல புதிய நாடுகளிலும் பரவி வருகின்றன.

வல்லுநர்கள் கூறுவதாவது, “நுளம்புகளை ஒழிக்க முடியாவிட்டாலும் அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். வீடுகளில் தண்ணீர் தேங்க விடாமலும், குப்பைகளை சரியாக அகற்றுவதும் மிக முக்கியம்” என்பதே.

சிறிய உயிர் என்றாலும் அதன் தாக்கம் மனிதனின் வாழ்வையே மாற்றும் அளவிற்கு ஆபத்தானது என்பது மறுக்க முடியாத உண்மை!


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்