Home>உலகம்>உலகத்தில் தீர்க்கப்ப...
உலகம்

உலகத்தில் தீர்க்கப்படாத 5 உலக மர்மங்கள் எவை தெரியுமா?

bySuper Admin|3 months ago
உலகத்தில் தீர்க்கப்படாத 5 உலக மர்மங்கள் எவை தெரியுமா?

உலகத்தையே அதிர்ச்சயில் ஆழ்த்திய மர்மங்களும் விளக்கங்களும்...

பொதுமக்களையும் ஆய்வாளர்களையும் குழப்பும் உலக மர்மங்கள்

நாம் வாழும் இந்த பூமி தொலைதூர வரலாறு, நாகரிகங்கள், தொல்லியல் அதிசயங்கள் என பல மறைக்கப்பட்ட மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அறிவியல் வளர்ந்தாலும் கூட, சில மர்மங்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல், உலக நாகரிகத்தில் புதிராகவே நீடிக்கின்றன. இங்கே, இன்றுவரை தீர்வு காணாத 5 முக்கிய உலக மர்மங்களைப் பற்றி பார்ப்போம்.



01. கிளியோபாட்ராவின் கல்லறை (Tomb of Cleopatra)

எகிப்தின் அழகியும் அரசியல்தலைவியுமான கிளியோபாட்ரா, இரசாயன விஷத்தை பயன்படுத்தி தற்கொலை செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால், அவரது உடல் எங்கே அடக்கம் செய்யப்பட்டிருந்தது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. சிலர் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள தபோசிரிஸ் மேக்னா பகுதியில் இருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Uploaded image




2. ஓக் தீவுப் புதையல் (Oak Island Treasure)

கனடாவில் உள்ள ஓக் தீவில் பல நூற்றாண்டுகளாக ஒரு மறைக்கப்பட்ட புதையல் இருக்கிறது என நம்பப்படுகிறது. பிரபலமான கடற்கொள்ளையர் கேப்டன் கிட், தனது கொள்ளையிட்ட செல்வங்களை இங்கு புதைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. பலரும் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து தேடியும், அந்த புதையல் இன்னும் கிடைக்கவில்லை. இது உலகின் நீடித்த மர்மங்களில் ஒன்றாக உள்ளது.

Uploaded image




3. செப்புச் சுருள் புதையல் (Copper Scroll Treasure)

இஸ்ரேலின் கும்ரான் பகுதியில் 1952ல் கண்டெடுக்கப்பட்ட செப்புச் சுருள்களில், 64 இடங்களில் புதைக்கப்பட்ட பொக்கிஷங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ரோமானியர்களிடம் இருந்து விலைமதிப்புள்ள பொருட்களை காப்பதற்காக யூதர்களால் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது. ஆனாலும், அந்த குறிப்புகள் உண்மையா? எங்கும் அவை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையே? என்பதே மர்மம்.

Uploaded image




4. கடவுளின் உடன்படிக்கைக் பெட்டி (Ark of the Covenant)

பழைய ஏற்பாட்டின் படி, மோசேவுக்கு கடவுள் அளித்த பத்து கட்டளைகளை கொண்ட கற்பலகைகள் இருந்த பெட்டி தான் Ark of the Covenant. இது யூதர்களால் மிகவும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில வரலாற்று ஆவணங்கள் இவ்விஷயத்தை உறுதிப்படுத்தினாலும், பாபிலோனியர்களின் தாக்குதலின்போது இது காணாமல் போனதாகவும், பிறகு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

Uploaded image




5. பாபிலோனின் தொங்கும் தோட்டம் (Hanging Gardens of Babylon)

பழங்கால ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த தொங்கும் தோட்டம், இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே உள்ளது. வானத்திற்கு நிகராக வளரும் மரங்கள், மாடி தோட்டங்கள் என வர்ணிக்கப்பட்டாலும், இதற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இன்னும் இல்லை. அது உண்மையிலேயே இருந்ததா அல்லது கற்பனையா என்றே இன்றுவரை சரியான பதில் இல்லை.

Uploaded image




இந்த மர்மங்கள், வரலாற்றின் அழிவில்லாத தடங்கள் போல இன்று வரைக்கும் ஆய்வாளர்களையும் உலக மக்களையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது. அறிவியல், தொல்லியல், மற்றும் வரலாற்று ஆய்வுகள் இவற்றில் சிலதிற்காவது ஒருநாள் தீர்வைத் தருமா என்பதே எதிர்பார்ப்பு.