இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம்
இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் பட்டியல் – தமிழ்நாட்டுக்கு 7வது இடம்
இந்தியாவில் ஒருவரின் சம்பள நிலை அவரின் கல்வித்தகுதி, அனுபவம், தொழில்துறை மற்றும் வேலை செய்யும் மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
இந்தியாவில் சராசரி வருடாந்திர சம்பளம் ரூ.9,65,350 ஆகும்.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சம்பள அடிப்படையில் தரவரிசை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஊழியருக்கும் சராசரி மாதச் சம்பளமாக ரூ.20,730 வழங்கப்படுகிறது.
அதன்பின் அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியல் பின்வருமாறு:
உத்தரப் பிரதேசம் - ரூ. 20,730
மேற்கு வங்கம் - ரூ. 20,210
மகாராஷ்டிரா - ரூ. 20,110
பீகார் - ரூ. 19,960
ராஜஸ்தான் - ரூ. 19,740
மத்தியப் பிரதேசம் - ரூ. 19,740
தமிழ்நாடு - ரூ. 19,600
கர்நாடகா - ரூ. 19,150
குஜராத் - ரூ. 18,880
ஒடிசா - ரூ. 18,790
இந்த பட்டியலில் தமிழ்நாடு 7வது இடத்தில் உள்ளது.
தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சம்பள உயர்வும் எதிர்காலத்தில் மேம்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|