அதிக வருமானம் தரும் வேலை - என்ன படிக்கலாம்?
கல்வியுடன் வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் - எதிர்காலத்துக்கான சிறந்த தேர்வு
எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான படிப்புகள்
இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி மட்டுமே போதாது, அதோடு வேலைவாய்ப்பு தரும் படிப்புகளையும் தேர்வு செய்வது மிக முக்கியமான ஒன்றாகியுள்ளது.
பலர் பாரம்பரியமாக பட்டப்படிப்புகள், கலை, அறிவியல், வாணிபம் போன்ற துறைகளை தேர்வு செய்தாலும், அவை வேலைவாய்ப்பு தரும் துறைகளுடன் நேரடியாக இணைந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, கல்வியைத் தொடரும் போதே வேலைவாய்ப்புகளை உருவாக்கும், அதிக வருமானம் தரும் படிப்புகள் மீது இளைஞர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
தற்போது உலகளவில் அதிகமான தேவை காணப்படும் துறைகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing), டேட்டா சயின்ஸ் (Data science), கம்ப்யூட்டர் புரோகிராமிங் (Computer Programming), கிராபிக்ஸ் டிசைனிங் (Graphic design), செவிலியர் (Nursing), ஆரம்பக் கல்வி (Early Childhood Education), விமானப் போக்குவரத்து (Civil Aviation Authority), ஹோட்டல் மேலாண்மை (Hotel Management)மற்றும் சுகாதாரத்துறைக்கான (Health Care) பாடநெறிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சியால், ஆன்லைன் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் தொடர்பான படிப்புகள் மிகுந்த தேவை பெற்றுள்ளன.
உதாரணமாக, டேட்டா சயின்ஸ் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் படிப்புகளை முடித்தவர்களுக்கு உலகளாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
அதேபோல், வெளிநாடுகளில் செவிலியர் மற்றும் ஆரம்பக் கல்வி பாடநெறிகளை முடித்தவர்களுக்கு அதிக வருமானமும் நிலையான வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இவை மட்டுமல்லாது, வணிக மேலாண்மை, நிதி ஆலோசனை, சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளும் எதிர்காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெறும் துறைகளாக கருதப்படுகின்றன.
எனவே, மாணவர்கள் தங்கள் ஆர்வத்தையும் திறமைகளையும் கருத்தில் கொண்டு கல்வி தேர்வு செய்வதோடு, வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் படிப்புகளையும் ஆழமாக ஆய்வு செய்து தேர்வு செய்வது மிக முக்கியம்.
இதன் மூலம் கல்வியுடன் வருமான வாய்ப்புகளும் இணைந்து, வாழ்க்கையை நிலையானதாகவும் வெற்றிகரமாகவும் அமைத்துக்கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|