Home>உலகம்>டிரம்ப் மிரட்டல் – க...
உலகம்

டிரம்ப் மிரட்டல் – கிரிப்டோ வரலாற்றிலேயே பெரிய சரிவு!

byKirthiga|27 days ago
டிரம்ப் மிரட்டல் – கிரிப்டோ வரலாற்றிலேயே பெரிய சரிவு!

சீனாவுக்கு 100% வரி மிரட்டல் – பிட்காயின், ஈதர், சோலானா விலை சரிந்தது

$18 பில்லியன் கிரிப்டோ சொத்துகள் திரவமாக்கம் – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிப்பதாக மிரட்டியதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு உலகளாவிய கிரிப்டோ நாணய சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் கிரிப்டோ சொத்துகளில் இருந்த ஆபத்தான கடன் முதலீடுகள் வெளிப்படையாக வெளிச்சத்துக்குவந்தன.

டிஜிட்டல் நாணயங்களில் பிட்காயின், ஈதர் மற்றும் சோலானா மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. CoinGlass தளத்தின் தகவலின்படி, மொத்தமாக $18.28 பில்லியன் மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் திரவமாக்கப்பட்டன. இதேவேளை நாஸ்டாக் மற்றும் S&P 500 குறியீடுகளும் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் $5 பில்லியன் பிட்காயின், $4 பில்லியன் ஈதர், மற்றும் $2 பில்லியன் சோலானா விற்பனையாகியதாக CoinGlass தெரிவித்துள்ளது. இது “கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய திரவமாக்கல் நிகழ்வு” என கூறப்படுகிறது.

பிட்காயின் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 10% வீழ்ச்சியடைந்து, வெள்ளிக்கிழமை $103,000 வரை சரிந்தது. பின்னர் சிறிதளவு மீண்டு $111,616.20 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. ஈதர் $4,365.63 இலிருந்து $3,742.88 ஆக குறைந்தது – சுமார் 14.2% வீழ்ச்சி. சோலானா $223.10 இலிருந்து $178.72 ஆக சரிந்தது – சுமார் 20% வீழ்ச்சி.

இவ்வாறான வீழ்ச்சியையும் பொருட்படுத்தாமல், டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிரிப்டோ சந்தை பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது. முன்பு பிட்காயினை “காற்றிலே உருவாக்கப்பட்ட நாணயம்” என விமர்சித்த டிரம்ப், தற்போது கிரிப்டோ ரசிகர்களை நோக்கி உரையாற்றி, தன் சொந்த மீம் நாணயத்தை அறிமுகப்படுத்தி, “தேசிய கிரிப்டோ கையிருப்பு” அமைப்பை வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட நிர்வாக உத்தரவின்படி, 401(k) ஓய்வூதிய திட்டங்களில் கிரிப்டோ சொத்துகளையும் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் பிட்காயின் வரலாற்றில் மிக உயர்ந்த $124,000 என்ற உச்சத்தை எட்டியது.

அமெரிக்கா–சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும்போதும், சீனா முக்கியமான rare earth minerals ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து, வர்த்தக பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்