Home>உலகம்>2 வயது குழந்தை மூச்ச...
உலகம்

2 வயது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

byKirthiga|about 2 months ago
2 வயது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

லாங்கஷயரில் நடந்த துயர சம்பவம் – மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன்

தனியார் சிறார் பாடசாலையில் மூச்சுத் திணறல்: 2 வயது சிறுவன் மரணம்

இங்கிலாந்தின் லாங்கஷயர் பகுதியில் உள்ள தனியார் கிராமிய நர்சரியில் நடந்த துயர சம்பவத்தில் 2 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Parbold Douglas C of E Academy வளாகத்துக்குள் இயங்கும் இந்நர்சரியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்தது.

போலீஸ் தகவலின்படி, சிறுவன் திடீரென மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவு அழைக்கப்பட்டு, சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவர்களின் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட லாங்கஷயர் போலீசார், மரணத்தில் எந்தவித சந்தேக சூழ்நிலைகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Selected image


வழக்கமான நடைமுறையின்படி, சம்பவம் தொடர்பான கோப்பு உள்ளூர் Coroner-க்கு அனுப்பப்படும் என்றும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நர்சரி தனது அறிக்கையில், “இது எங்களுக்குப் பேர்துயரம். மிகவும் சிறப்பு மிக்க, அன்புக்குரிய சிறுவனை இழந்ததில் நாங்கள் முற்றிலும் கவலையடைந்துள்ளோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அந்தக் குடும்பத்தினருடனே உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் உள்ளூர் சமூகத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தச் சிறுவனின் குடும்பம், தங்களின் தனியுரிமையை மதிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்