பாலஸ்தீனத்தை அங்கீகரித்த உலக நாடுகள் -இனி என்ன நடக்கும்
பாலஸ்தீன் நாட்டை அங்கீகரித்து உலக நாடுகள் மீது அழுத்தம் அதிகரிப்பு
இஸ்ரேலுக்கு அதிர்ச்சி – 3 முக்கிய நாடுகள் பாலஸ்தீனை அங்கீகரித்தன
இஸ்ரேலுக்கு கடும் அழுத்தம் ஏற்படும் வகையில், உலகின் முக்கிய நாடுகளான இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா இன்று (21) பாலஸ்தீன் நாட்டை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.
கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிக்கையில், “பாலஸ்தீன் அரசை கனடா அங்கீகரிக்கிறது. பாலஸ்தீனமும், இஸ்ரேலும் அமைதியான எதிர்காலத்தை நோக்கி செல்லும் வகையில் நாங்கள் பங்கெடுக்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, பாலஸ்தீன் அதிகார சபை 2026 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலை நடத்தவும், ஹமாஸ் எந்த வகையிலும் பங்குபெறாது என்பதற்கும் உறுதி அளித்துள்ளது.
மேலும், ஆயுதப்படைகள் நீக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் G7 நாடுகளில் முதன்முறையாக கனடா பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அன்டோனி ஆல்பனீஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “பாலஸ்தீன மக்களின் நீண்டகால ஆசையை மதித்து, அவர்களின் சுயாட்சி நாட்டை இன்று அங்கீகரிக்கிறோம்” என்று அறிவித்தனர். இது ஐ.நா பொதுச்சபையின் 80ஆம் அமர்வில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய பிரதமர் பயணத்துடன் இணைந்து அறிவிக்கப்பட்டது.
இதனுடன், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில், “இன்று அமைதிக்கும், இரு-நாட்டு தீர்விற்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பாலஸ்தீனத்தை இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 193 ஐ.நா உறுப்புநாடுகளில் 148 நாடுகளாக பாலஸ்தீனை அங்கீகரித்துள்ளது.
இந்நடவடிக்கையை இஸ்ரேல் கடும் எதிர்ப்புடன் விமர்சித்துள்ளது. எனினும், பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுக்கல் போன்ற நாடுகளும் சமீபத்தில் இதே போக்கை பின்பற்றியுள்ளன. அமெரிக்கா இதுவரை பாலஸ்தீன அங்கீகாரத்தில் ஒப்புதல் தராத நிலையில், இங்கிலாந்து எடுத்த இந்த முடிவு சர்வதேச அரசியலில் பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|