AI தொழில்நுட்பம்: நம்பகத்தன்மையை குறைக்கிறதா?
AI பயன்படுத்தும் ஊழியர்கள் மீது எதிர்மறை பார்வை: ஆய்வில் பகீர்!
பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, Gemini, Claude போன்றவை வேலைகளை வேகமாக முடிக்க உதவுகின்றன.
ஆனால், இவை தொழில்நுட்ப நன்மைகளை மட்டுமல்லாமல், தொழில்முறை நம்பகத்தன்மையை பாதிக்கலாம் என்ற புதிய ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டியூக் பல்கலைக்கழகம் நடத்திய "Evidence of a Social Penalty for Using AI" என்ற தலைப்பிலான ஆய்வு, PNAS என்ற இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் 4,400 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஆய்வின் வெளிப்பாடாக, AI கருவிகளை பணியில் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களால் திறன் குறைவானவர்களாகவும், சோம்பேறிகளாகவும் பார்க்கப்படுகிறார்கள். மற்றும் இது, அவர்கள் வேலை திறமையாக செய்யப்பட்டிருந்தாலும் கூட, சமூக மதிப்பீட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
AI வளர்ச்சி எவ்வளவு அதிகரித்துள்ளது?
AI பயன்பாடு 6 ஆண்டுகளில் 50%ல் இருந்து 72% ஆக உயர்ந்துள்ளது.
AI தொழில்நுட்ப வளர்ச்சி 65% அளவுக்கு வளர்ந்துள்ளது.
இன்று பெரும்பாலான நிறுவனங்களில் AI வேலைக்குழு உறுப்பினராகவே பார்க்கப்படுகிறது.
AI பயன்பாட்டில் உள்ள முரண்பாடுகள்...
AI பயன்படுத்தும் ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களிடமிருந்து எதிர்மறையான பார்வையை சந்திக்கின்றனர்.
வேலைக்கு பொருத்தமாக இல்லாத இடங்களில் AI பயன்படுத்தும்போது, தொழில்முறை பிம்பம் பாதிக்கப்படுகிறது. AI-ஐ பயன்படுத்தாதவர்கள், அதைப் பயன்படுத்தும் சக ஊழியர்களை "சோம்பேறிகள்" என்று நினைக்கிறார்கள்.
ஆய்வாளர்களின் பார்வையில்,
வயது, பாலினம், தொழில் போன்ற தனிப்பட்ட அம்சங்களில் பெரிதாக தாக்கம் ஏற்படுவதில்லை.
AI பயன்பாடு திறந்தவெளியில் அங்கீகரிக்கப்படும் சூழ்நிலையில், பயனாளர்கள் மேம்பட்டவர்கள் என கருதப்படுகிறார்கள்.
AI கருவிகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என்பது உறுதி. ஆனால், அதன் சமூக தாக்கங்கள் குறித்து பணியிடங்களில் விழிப்புணர்வு தேவை.
AI பயன்பாட்டை திறமையாகவும், நேர்த்தியாகவும், வேலைக்கேற்ற முறையில் செய்யும் போது மட்டுமே, தொழில்முறை நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும்.