Home>ஆன்மீகம்>வீட்டில் மீன் தொட்டி...
ஆன்மீகம்

வீட்டில் மீன் தொட்டி வைப்பதின் வாஸ்து பலன்கள்

byKirthiga|about 1 month ago
வீட்டில் மீன் தொட்டி வைப்பதின் வாஸ்து பலன்கள்

வீட்டில் வாஸ்து விதிகளின்படி மீன் தொட்டி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மீன் தொட்டியின் அதிர்ஷ்ட பலன்கள் – செல்வம், அமைதி, வளம்

வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட இடம் உண்டு என்று நம்பப்படுகிறது. எப்படி சமையலறை ஒரு குறிப்பிட்ட திசையில் இருக்க வேண்டும், பூஜை அறை தனி இடத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறதோ, அதேபோல வீட்டில் மீன் தொட்டியை சரியான முறையில் வைத்தாலும் அதுவும் நல்ல பலனை தரும் என்று நம்பப்படுகிறது.

வீட்டுக்குள் மீன் தொட்டி இருந்தால் அது குடும்பத்தின் அமைதிக்கும் செழிப்புக்கும் காரணமாகும்.

மனஅழுத்தம் குறைக்கும்

வண்ணமயமான மீன்கள் நீரில் சுறுசுறுப்பாகச் சுற்றித் திரிவதை பார்ப்பது மனதை அமைதிப்படுத்தும். ஒருவருக்கு அதிகமான மன அழுத்தம் இருந்தால், மீன்களின் அசைவைக் காண்பது மனதை சாந்தமாக்கும். இதனால் குடும்பத்தில் சின்னச் சின்ன தகராறுகள் குறைந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

செல்வம் மற்றும் வளம் சேர்க்கும்

வாஸ்து படி, வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பது செல்வ வளத்தையும் நிதி முன்னேற்றத்தையும் தரும். குறிப்பாக வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு வைக்கப்படும் மீன் தொட்டி குடும்பத்துக்கு பணவரவு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கூட்டும் என்று நம்பப்படுகிறது.

எதிர்மறை ஆற்றலை நீக்கும்

வீட்டுக்குள் நுழையும் தீய ஆற்றல்களை மீன்கள் உறிஞ்சி, நேர்மறை ஆற்றலை பரப்பும் என்ற நம்பிக்கை உள்ளது. இது வீட்டை தீய கண்ணிலிருந்து காக்கும் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. மீன்கள் தொடர்ந்து நீந்தும் போது உருவாகும் நீரின் அலைச்சலும், சத்தமும் வீட்டில் சுறுசுறுப்பான சூழலை உருவாக்கும்.

Selected image


குடும்ப பாசத்தை அதிகரிக்கும்

மீன் தொட்டியை பிரதான கதவின் இடது பக்கத்தில் வைத்தால், அது தம்பதிகளுக்குள் அன்பையும் புரிதலையும் அதிகரிக்கும் என வாஸ்து கூறுகிறது. வீட்டில் சமாதானம் நிலைத்து நிற்கும். ஆனால் சமையலறையில் மீன் தொட்டி வைப்பது நல்லதல்ல, அது கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.

மீன் தொட்டியை பராமரிக்கும் விதம்

மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். நீர் பழையதாகவும் அழுக்காகவும் இருந்தால் அது செல்வ வளர்ச்சியை தடுக்கும். பாசி படிந்த நீர் வீட்டில் சிரமங்களையும் தடைகளையும் உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே மீன் தொட்டியின் நீர் எப்போதும் தெளிவாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

எத்தனை மீன்கள் வைக்கலாம்?

வாஸ்துவில், ஒற்றைப்படை எண்ணிக்கையிலான மீன்கள் நல்லதென கூறப்படுகிறது. குறிப்பாக 9 மீன்களை வைப்பது மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. அதில் எட்டு தங்க நிற மீன்களும், ஒரு கருப்பு நிற மீனும் இருந்தால், அது செல்வம், ஆரோக்கியம், நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றை கூட்டும் என்று நம்பப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்