படுக்கையறை-குளியலறை வாஸ்து குறிப்புகள்
இணைந்த குளியலறை-கழிப்பறை வைத்திருப்போருக்கான வாஸ்து வழிமுறைகள்
வாஸ்து படி படுக்கையறை, குளியலறை அமைப்பு ரகசியங்கள்
இன்றைய வீட்டு வடிவமைப்பில் படுக்கையறை மற்றும் குளியலறை, கழிப்பறை ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி பார்த்தால், இந்த வகையான அமைப்புகள் கவனமாக செய்யப்பட வேண்டும்.
இல்லையெனில், அது வீட்டின் ஆற்றல் சமநிலையை பாதித்து, உடல்நல பிரச்சினைகள், குடும்பத்தில் தகராறு, மன அழுத்தம் போன்றவை உருவாகக் கூடும்.
எனவே சில எளிய வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது அவசியம்.
குளியலறை மற்றும் கழிப்பறை இணைக்கப்பட்டிருப்பின், அது அறையின் வடகிழக்கு மூலையில் இருக்கக் கூடாது.
அப்படிச் செய்தால் வீட்டில் ஆரோக்கிய பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் உண்டு. சிறந்த இடம் அறையின் தென்மேற்கு அல்லது மேற்கு திசை ஆகும்.
மேலும், கழிப்பறையின் கதவு எப்போதும் மூடப்பட்டே இருக்க வேண்டும். திறந்திருப்பதால் எதிர்மறை ஆற்றல் படுக்கையறைக்குள் நுழையும்.
குளியலறையில் உள்ள நீர் வடிகால் (drain) எப்போதும் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இதனால் நல்வாழ்வு அதிகரிக்கும். கழிப்பிடத்தை (commode) தெற்கோ மேற்கு திசையை நோக்கி அமைக்கக் கூடாது.
அது வடக்கு அல்லது தெற்கு திசையை நோக்கி அமைய வேண்டும். மேலும், குளியலறை மற்றும் கழிப்பறையில் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் வாஸ்துவின் முக்கியக் குறிப்பாகும்.
அறையின் காற்றோட்டம், வெளிச்சம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜன்னல்கள், ventilator கள் சரியான இடத்தில் இருக்க வேண்டும்.
வாஸ்துப்படி, குளியலறையில் எப்போதும் மெல்லிய மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது வெளிர் நீலம் போன்ற நிறங்களைப் பயன்படுத்தலாம். இது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
இந்த எளிய வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், படுக்கையறையுடன் இணைந்த குளியலறை, கழிப்பறை இருந்தாலும் ஆரோக்கியம், அமைதி, குடும்ப ஒற்றுமை ஆகியவை காக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|