கரூர் அசம்பாவிதம் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ
41 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் இரங்கல்
“என்னைத் தண்டியுங்கள், ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்” – கரூர் நிகழ்வை குறித்து விஜய் உருக்கமான பதிவு
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் திகதி நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் சூழ்நிலையையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 30) விஜய் தனது வீடியோவின் மூலம் தனது மனவலியை வெளிப்படுத்தியுள்ளார். “என் வாழ்க்கையில் இவ்வளவு வலியான சூழ்நிலையை சந்தித்ததே இல்லை. மனம் முழுக்க வலி மட்டுமே. மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்காக வந்தார்கள். ஆனால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. அத்தனை உயிர்களை இழந்த வேதனையை சொற்களில் விவரிக்க முடியாது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எங்களுக்காக அரசியல் தலைவர்கள், நண்பர்கள் பேசியதற்கு நன்றி. ஏன் கரூரில் மட்டும் இப்படி நடந்தது? எதற்காக நடந்தது? உண்மை விரைவில் வெளிச்சம் பார்க்கும். எங்களுக்கு தரப்பட்ட இடத்திலேயே நாங்கள் பேசியோம், எந்த தவறும் செய்யவில்லை. இருந்தும் எங்கள் தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது மனதை புண்படுத்துகிறது. சி.எம். சார் உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விஜய் தனது உரையின் இறுதியில், “நம் அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும் தைரியமாகவும் தொடரும்” என வலியுறுத்தியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|